பெத்தவங்கள இப்படியா பேசுறது!! மேடையில் கீழ்த்தரமாக நடந்து கொள்ளும் இயக்குனர் மிஸ்கின்

Gossip Today Actors Mysskin Tamil Actors
By Edward Jul 26, 2023 09:03 AM GMT
Report

தமிழில் 2006ல் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியவர் இயக்குனர் மிஸ்கின். சிறு ரோலில் நடித்து வந்தாலும் நந்தலாலா, யுத்தம் செய், முகமுடி, ஓநாயும் ஆட்டக்குட்டியும், பிசாசு, துப்பரிவாளன், சைக்கோ போன்ற படங்களை இயக்கி பிரபலமானார்.

தற்போது பிசாசு 2 படத்தினை இயக்கி வரும் மிஸ்கின், லியோ படத்தில் வில்லன் ரோலில் நடித்து வருகிறார்.

இயக்குனர் மிஸ்கின் சமீபகாலமாக மேடை பேச்சியில் பேசும் போதும் வேண்டும் என்றே கெட்டவார்த்தைகளும் வரம்பு மீறிய அவதூறு வார்த்தைகளையும் பயன்படுத்தி பேசி வருகிறார்.

அதேபோல் சமீபத்தில் ஒரு புத்தகம் வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்று மேடையில் பேசியிருக்கிறார்.

ஆரம்பத்தில் புத்தகத்தை பற்றி சரியாக பேசி வந்த மிஸ்கின் ஒரு கட்டத்தில் தேன் ஆரம்பித்து அம்மா, அப்பாவை கெட்டவார்த்தையில் பேசியது வரை இஷ்டத்திற்கு பேசியிருக்கிறார்.

மேலும் சொல்லக்கூடாத முகம் சுளிக்கும் கெட்ட வார்த்தைகளையும் மேடையில் பேசி பலரின் கண்டனத்தை சம்பாதித்து இருக்கிறார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியதை தொடர்ந்து நெட்டிசன்கள் பல கடுமையாக திட்டி வருகிறார்கள்.