டார்ச்சர் தாங்காமல் ஓட்டம் பிடித்த அழகி!! அந்த காட்சியில் துண்டை போட்டு ரிசர்வ் செய்த ரம்யா கிருஷ்ணன்..

Nadhiya Ramya Krishnan Gossip Today
By Jai Mar 16, 2024 03:45 AM GMT
Report

80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகையாக இருந்து தற்போது நீலாம்பரி, ராஜமாதா சிவகாமிதேவி போன்ற கதாபாத்திரங்கள் மூலம் மிகப்பெரிய அந்தஸ்த்தைபெற்றார் நடிகை ரம்யா கிருஷ்ணன். தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வரும் ரம்யா கிருஷ்ணன், நீலாம்பரி, ராஜமாத சிவகாமி தேவி போன்ற பெயர்களால் புகழப்பட்டார். ரஜினியுடன் பல ஆண்டுகள் கழித்து ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.

அதன்பின் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி வெளியான குண்டூர் காரம் படத்தில் முக்கிய ரோலில் நடித்திருந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை பகிர்ந்து வரும் ரம்யா கிருஷ்னன், பற்றிய சில தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. இந்நிலையில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ரம்யா கிருஷ்ணன் ரோலில் முதலில் நடிக்கவிருந்தது நடிகை நதியா தானாம்.

டார்ச்சர் தாங்காமல் ஓட்டம் பிடித்த அழகி!! அந்த காட்சியில் துண்டை போட்டு ரிசர்வ் செய்த ரம்யா கிருஷ்ணன்.. | Nadhiya Was Scared To Act In Super Deluxe Ramya Kr

ஆரம்பத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்து சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த நதியா, படத்தின் ரோல் மிகவும் எதிர்மறையாக இருக்கிறது என்றும் நான் நடித்தால் இதுவரை நான் எடுத்த பெயரே போய்விடும்.

மக்கள் மத்தியில் இருக்கும் என்னுடைய கிரேஸ் போய்விடும் என்பதால் நடிக்க முடியாது என்று கூறி வந்த வேகத்தில் திரும்பி சென்றிருக்கிறாராம். அதன்பின் தான் நடிகை ரம்யா கிருஷ்ணன் தன்னுடைய சிறப்பான நடிப்பை காட்டி அப்படத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.