முதல் காதலி சமந்தா கிடையாதா?திருமணத்திற்கு முன்பே கமல் மகளுக்கே ரூட்டை போட்ட நாக சைதன்யா
தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக பிரபலமாகியவர் நடிகை சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாகினார். அதன்பின், அடுத்தடுத்த படங்களில் நடித்து மக்கள் மனதை ஈர்த்தார்.
ஆரம்ப காதல் - திருமணம்
ஆரம்பத்தில் நடிகர் சித்தார்த்துடன் காதலில் இருந்து பிறகு பிரிந்த சமந்தா நாக சைதன்யாவுடன் பல ஆண்டுகளாக நட்பாக இருந்து பின் காதலியாக மாறினார். இருவரும் கடந்த 2017ல் திருமணம் செய்து கொண்டனர்.
4 வருடத்திற்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஆண்டு பிரிந்தனர். தற்போது விவாகரத்து பெற்றப்பின் சமந்தா உல்லாச பறவையாக ரசிகர்களை தன் கட்டுப்பாட்டில் வைத்து வருகிறார். அதேசமயம் நாக சைதன்யா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

நாக சைதன்யா ஸ்ருதி காதல்
இந்நிலையில் நடிகை சமந்தாவை நாக சைதன்யா முதலில் காதலிக்கவில்லையாம். பிரேமம் படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடிகை ஸ்ருதிஹாசன் நடிகர் நாக் சைதன்யாவுடன் ஜோடி போட்டு நடித்திருப்பார். அப்படத்தின் போது இருவரும் ரகசியமாக சந்தித்து வந்ததை பெரியளவில் பேசினர்.
இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வந்தது. இதனை இணையத்தில் பெரியளவில் பேசியதால் இருவரும் அமைதியாக பிரிந்துவிட்டனர். இதன்பின் தான் நடிகை சமந்தாவை 2017 ல் திருமணம் செய்திருக்கிறார் நாக சைதன்யா.
