விவாகரத்துக்கு பின் சமந்தாவை மிஸ் செய்கிறாரா மாஜி கணவர் நாக சைதன்யா? வைரலாகும் புகைப்படம்

Samantha Naga Chaitanya
By Edward Jul 08, 2022 06:20 PM GMT
Report

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் நாக சைதன்யா நடிகை சமந்தாவை விவாகரத்து செய்த பின் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

இதைதொடர்ந்து விக்ரம் குமார் இயக்கத்தில் தேங்க் யூ என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகை ராஷிகண்ணா ஜோடியாக நடித்துள்ள இப்படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் பெயர் தேங்க் யூ என்பதால் தான் தேங்க் யூ சொல்ல மறந்தவர்களை நினைவு கூர்ந்து ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.

தன், அப்பா, அம்மா, செல்லம் ஹேஷ்(வீட்டு நாய்) போன்றவர்களுடன் எடுத்த புகைப்படத்தினை பகிர்ந்து, அடிக்கடி பயன்படுத்தப்படும் வார்த்தை தேங்க் யூ, ஆனால் இதனை சொல்லவேண்டிய நேரத்தில் இடத்தில் பயன்படுத்துவது இல்லை. எனக்கு அம்மா எல்லாமே அவர்கள் தான்.

ஒரு வழியை காட்டிய அப்பா எனக்கு என் நண்பரக இருப்பதற்கு நன்றி. ஹேஷ்- அன்பு சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி. என்னை ஒரு மனிதனாக வைத்திருந்ததற்கும் நன்றி என்று கூறியுள்ளார்.

இதனை சிலர் சமந்தாவையும் இப்படியொரு நிலையில் வைத்து தான் ஹேஷ்-க்கு நன்றி கூறினீர்களா? ஏனென்றால் தற்போது ஹேஷ் சமந்தா விட்டில் இருக்கிறதே என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.