சமந்தாவுடன் விவாகரத்தா? முதன் முதலில் கடும் கோபத்தை வெளிப்படுத்திய கணவர் நாகசைதன்யா..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. சமீபகாலமாக வதந்திகளில் அதிகமாக பேசப்படும் நடிகை நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளார். பேமிலி மேன் 2 படத்தில் நடித்த காட்சிகளால் பல சர்ச்சையில் சிக்கி வருகிறார் சமந்தா. சமீபத்தில் விவாகரத்து குறித்த கேள்விகளுக்கு அமைதியாக இருந்து வரும் சமந்தா கோவிலுக்கு சென்றாலும் விவாகரத்து பற்றிய கேள்விக்கு கடும்கோபத்தில் புத்தி இருக்கா கேட்க வேண்டிய இடமா? என்று கூறினார்.

இந்த செய்தி குறித்து கணவர் நாக சைதன்யா கூட அமைதியான சூழ்நிலையை உருவாக்கி படங்களில் கவனம் செலுத்தி வந்தார். லவ் ஸ்டோரி படத்தில் சாய் பல்லவியுடன் நடித்து வெளியாக இருக்கும் நிலையில் பிரபல தொகுப்பாளர் பரத்வாஜ் ரங்கனுக்கு பேட்டிகொடுத்துள்ளார். விவாகரத்து பற்றி அவர் கேட்கப்பட்டது குறித்து நாக சைதன்யா,

நான் சிறுவயதில் இருந்தே திரைத்துறையோடு தனிப்பட்ட வாழ்க்கையை ஓப்பிடாமல் பார்த்து வளர்ந்திருக்கிறேன். இந்த என் பெற்றோரிடமிருந்து எனக்கு வந்தது. படப்பிடிப்பில் இருந்து வீடு திரும்பினால் அதைபற்றிவிவாதிக்க மாட்டார்கல் அது நல்ல பழக்கம் என்பதால் நானும் அதை கடைப்பிடிக்கிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் சமந்தாவுடனான இந்த செய்தி வதந்தியை பார்த்து எனக்கு மிகந்த மன வேதனையை கொடுத்துள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் ஒரு செய்தியை மறக்கடிக்க மற்றொரு செய்து பரப்பரப்பாக பேசப்பட்டு நாளை வேறு ஒரு செய்தி வந்த உடனே அதை மறந்துவிடுகிறோம். அதன் புரிதல் எனக்கு வந்தது இது குறித்து நான் கவலைப்படுவதை நிறுத்திவிட்டேன் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்