அந்த வயது நடிகையுடன் மீண்டும் இணைந்த நாகசைதன்யா.. சமந்தாவுடன் விவாகரத்துக்கு பின் இப்படியா

Samantha Naga Chaitanya Krithi Shetty
1 வாரம் முன்
Kathick

Kathick

தெலுங்கு நடிகர் நாகசைதன்யா மற்றும் நடிகை சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். நான்கு ஆண்டுகள் நீடித்த இந்த திருமண வாழ்க்கை, கடந்த ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.

விவாகரத்துக்கு பின் படங்களில் நடிப்பதை மட்டுமே கவனம் செலுத்தி வரும் நாகசைதன்யா, தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க 18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டி கமிட்டாகியுள்ளார்.

இவர் இதற்கு முன் தெலுங்கில் வெளிவந்த பங்கார் ராஜு எனும் திரைப்படத்தில் நாகசைதன்யா மற்றும் கீர்த்தி ஷெட்டி இணைந்து நடித்திருந்தார்கள். இப்படத்தை தொடர்ந்து மீண்டும் இப்படத்தில் ஜோடியாக இருவரும் நடிக்கவுள்ளது திரை வட்டாரத்தில் சில கிசுகிசுவை எழுப்பியுள்ளது.

சாதரணமாகவே நடிகர், நடிகை இரண்டு முறை ஒன்றாக நடித்தால், திரை வட்டாரத்தில் என்ன கிசுகிசு பேசப்படுமோ, அதே விஷயம் தான், தற்போது இவர்களின் மீதும் கூறப்படுகிறது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.