அந்த விஷயம் சோபிதாவிடம் ஈர்க்கும் வகையில் இருக்கு, மருமகளை அப்படி வர்ணித்த நாகர்ஜுனா!!

Naga Chaitanya Sobhita Dhulipala Nagarjuna
By Dhiviyarajan Aug 10, 2024 08:30 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் நாகர்ஜுனாவுக்கு தமிழ் நாட்டிலும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. இவருடைய மூத்த மகன் நாக சைதன்யா சினிமாவில் நடிகராக வலம் வருகிறார்.

இவர் கடந்த 2017 -ம் ஆண்டு சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

அந்த விஷயம் சோபிதாவிடம் ஈர்க்கும் வகையில் இருக்கு, மருமகளை அப்படி வர்ணித்த நாகர்ஜுனா!! | Nagarjuna S Old Comment On Sobhita Dhulipala

கடந்த சில ஆண்டுகளாக நாக சைதன்யா, நடிகை சோபிதாவை டேட் செய்து வந்த நிலையில், சமீபத்தில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்நிலையில் நாகர்ஜுனா, சோபிதா பற்றி பேசிய பழைய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், "சோபிதா படத்தில் ஹாட்டாக இருந்தார். அவருடைய நடிப்பு ஈர்க்கும் வகையில் இருந்தது. அவருக்குள் இன்னும் பல திறமைகள் உள்ளது" என்று நாகர்ஜுனா பேசியுள்ளார்.

 நாகர்ஜுனா இவ்வாறு பேசிய வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.