அவசர அவசரமாக நடைபெற்ற நாக சைதன்யா நிச்சயதார்த்தம்.. பின்னணி காரணம் இதுதானா?

Samantha Naga Chaitanya Sobhita Dhulipala Nagarjuna
By Dhiviyarajan Aug 12, 2024 07:54 AM GMT
Report

 தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நாகர்ஜுனாவுக்கு இரண்டு மகன் உள்ளனர். இருவருமே சினிமாவில் நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கின்றனர்.

மூத்த மகன் நாக சைதன்யா கடந்த 2017 ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களது திருமண வாழ்க்கை சரியாக 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.

இதனை அடுத்து நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவை டேட்டிங் செய்து வந்தனர். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்தது.

இந்த நிலையில் நாக சைதன்யா - சோபிதா துலிபாலா என்ற நடிகையை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளார். நாகர்ஜுனா, இவர்களுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை எக்ஸ் தலத்தில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நாகர்ஜுனா, ஆகஸ்ட் 8ம் தேதி ரொம்ப நல்ல நாள் என்பதால் அவசரமாக நிச்சயதார்த்தத்தை நடத்த முடிவு செய்தோம். இருவரும் திருமணம் செய்துகொள்வதில் உறுதியாக இருந்ததால் உடனே நிச்சயதார்த்தத்தை நடத்தலாம் என நடத்திவிட்டோம். இன்னும் திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்று நாகர்ஜுனா கூறியுள்ளார்.    

அவசர அவசரமாக நடைபெற்ற நாக சைதன்யா நிச்சயதார்த்தம்.. பின்னணி காரணம் இதுதானா? | Nagarjuna Talk About Naga Chaitanya Engagement