40 வருட சினிமா வாழ்க்கை!! நடிகை ஸ்ரீதேவியை ஒதுக்கி வந்த பிரபல சூப்பர் ஸ்டார்..

Sridevi Gossip Today Nandamuri Balakrishna
By Edward Sep 06, 2024 05:30 AM GMT
Report

ஸ்ரீதேவி

இந்திய சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டாப் நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்த ஸ்ரீதேவி நடிகர்களைவிட அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்ந்தவர்.

40 வருட சினிமா வாழ்க்கை!! நடிகை ஸ்ரீதேவியை ஒதுக்கி வந்த பிரபல சூப்பர் ஸ்டார்.. | Nandamuri Balakrishna Opens Not Working Sridevi

கடந்த 2018ல் துபாய் ஓட்டலில் மர்மமான முறையில் மரணத்தது அனைவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. தெலுங்கில் என் டி ஆர், நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா போன்ற பழைய தலைமுறை ஹீரோக்களோடு ஜோடிப்பட்ட ஸ்ரீதேவி வெங்கடேஷ், நாகர்ஜுனா என்று இரண்டாம் தலைமுறை ஹீரோக்களோடும் நடித்தார்.

ஆனால் என் டி ஆரின் வாரிசான நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் மட்டும் ஸ்ரீதேவி நடிக்கவில்லை. சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நந்தமுரி பாலகிருஷ்ணாவிடம் ஸ்ரீதேவியோடு ஏன் நடிக்கவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டது.

40 வருட சினிமா வாழ்க்கை!! நடிகை ஸ்ரீதேவியை ஒதுக்கி வந்த பிரபல சூப்பர் ஸ்டார்.. | Nandamuri Balakrishna Opens Not Working Sridevi

நந்தமுரி பாலகிருஷ்ணா காரணங்கள்

அதற்கு அவர், ஸ்ரீதேவியுடன் நடிக்காததற்கு காரணங்கள் தனியாக எதுவும் இல்லை, அது முற்றிலும் தற்செயலாக நடந்த ஒன்றுதான். எந்தவொரு திரைப்படத்திலும் அதில் நடிக்கும் கலைஞர்கள் தேர்வு என்பது மிகவும் முக்கியம்.

ஸ்ரீதேவி போன்ற பெரிய நடிகையை எளிமையான ஒரு படத்தில் நடிக்கவைத்தால் அது நன்றாக இருக்காது, தன்னோடு ஸ்ரீதேவியை ஓரிரு படங்களில் நடிக்க வைக்க சிலர் வற்புறுத்தியதாகவும் நான் வேண்டாம் என்று கூறியதாகவும் பாலகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.