சிம்பு - நயன்தாரா காதலை ரஜினிகாந்த் பிரித்தார்.. அதேபோ தனுஷ்!! அதிர்ச்சி கொடுத்த இயக்குநர் நந்தக்குமார்...
தனுஷ் - நயன் பிரச்சனை
நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் ஆவணப்படமாக உருவாக்கப்பட்ட நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் நானும் ரவுடி தான் படத்தின் சில காட்சிகள் இடம்பெற்றதாக கூறி அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷ்10 கோடி கேட்டு குற்றம் சாட்டி வழக்கும் தொடர்ந்துள்ளார்.
இதுகுறித்த பேச்சுக்கள் பலர் பேசி வரும் நிலையில் நடிகை நயன் தாரா பற்றி இயக்குநர் நந்தவனம் நந்தக்குமார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்து ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார்.
விக்னேஷ் சிவன் காதலி
அதில், நானும் ரவுடி தான் படம் ஆரம்பிக்கும் முன் விஜய் சேதுபதி ஒரு விழாவில் எந்த நடிகையை தூக்குவதற்கு ஆசைப்படுவீங்க என்ற கேள்விக்கு நயன் தாரா என்று கூறியிருந்தார். அந்த சமயத்தில் தனுஷின் தயாரிப்பு கம்பெனி ஆரம்பிக்கப்பட்டு விக்னேஷ் சிவன் கதையில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்தார். அவருடன் நயன் தாரா நடித்தால் காம்பினேஷன் நன்றா இருக்கும் என்று தனுஷ் முடிவு பண்ணிதான் அப்படத்தை எடுத்தார். அப்படத்தில் விஜய் சேதுபதி குறைந்த சம்பளம் தான் வாங்கி நடித்தார்.
அப்படி உருவாகிய அப்படத்தில் விக்னேஷ் சிவன் நயன் தாராவை வர்ணித்து பாட்டு எழுத இருவருக்கும் காதல் வந்துச்சு. நயன் தாராவை பொறுத்தவரைக்கும் விக்னேஷ் சிவனிடம் அவர் எந்த ஒரு பொய்யையும் சொல்லவே இல்லை. ஆனால் விக்னேஷ் சிவனுக்கு ஒரு காதல் இருந்ததை நயன் தாராவிடம் சொல்லாமல் மறைத்துவிட்டார்.
ஆனால் நயன் - விக்கி திருமணம் செய்து கொள்வார்கள் என்று தனுஷ் நினைக்கவே இல்லை, ஏனென்றால் விக்னேஷ் சிவனை பற்றி தனுஷுக்கு அதிகமாக தெரியும் என்பதால் இந்த திருமணம் நடக்காது, நடக்கூடாது என்று நினைத்தார். ஆனால் அவர்கள் இருவரும் திருமண விஷயத்தில் உறுதியாக இருந்ததால் அவர்களின் திருமணம் நடந்துவிட்டது.
சிம்பு - நயன் காதல்
இப்படித்தான் சிம்புவும் நயன் தாராவும் சேரக்கூடாது, சேர்ந்தால் சரியாக இருக்காது என நினைத்து, நயன் தாராவை காப்பாற்றும் நோக்கத்துல் அவர்களின் காதலை ரஜினிகாந்த் பிரித்தார். ஆனால் விக்னேஷ் சிவன் நயன் தாரா விஷயத்தில் அவர்கள் இருவரும் காதலில் உறுதியாக இருந்ததால் அவர்கள் திருமணம் நடந்துவிட்டது.
இதுவே நயன் தாராவுக்கு திருமணம் ஆகாமல் இருந்திருந்தால் நிச்சயமாக தனுஷ், நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்து இருக்க மாட்டார். இலவசமாகவே எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியிருப்பார். ஆனால் அவருக்கும் திருமணமாகிவிட்டதால் தான் தனுஷ், இந்த விஷயத்தில் வழக்கு போடும் அளவிற்கு சென்றுள்ளார் என்று இயக்குநர் நந்தவனம் நந்தக்குமார் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.