தடபுடலாக நடந்து முடிந்த நடிகர் நெப்போலியன் மகன் திருமணம்.. அழகிய புகைப்படம் இதோ
நெப்போலியன் மகன்
நடிகர் நெப்போலியன் அவருடைய மூத்த மகன் தனுஷின் திருமணத்திற்காக சில மாதங்களுக்கு முன்பே குடும்பத்துடன் ஜப்பானுக்கு கப்பலில் சென்று பார்வையிட்டார்.
பின் சில நாட்களுக்கு முன் ஜப்பானுக்கு சென்று திருமணத்திற்கான வேலைகளில் ஈடுபட்டு வந்தார் நெப்போலியன். இந்த திருமணத்திற்காக நடிகை மீனா, கலா மாஸ்டர் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் ஜப்பானுக்கு படையெடுத்து வந்தனர்.
திருமணத்திற்கு முன் சங்கீத், ஹல்தி, மெஹந்தி போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற்று அதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதை நம்மால் காண முடிந்தது.
அதை தொடர்ந்து, மணமக்கள் தனுஷும், அக்ஷயாவும் இணைந்து எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
அழகிய புகைப்படம்
இந்நிலையில், மிகவும் பிரமாண்டமாக இன்று நெப்போலியன் மகன் தனுஷின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. அதன் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு, ரசிகர்கள் சினிமா நட்சத்திரங்கள் என பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அழகிய புகைப்படம் இதோ,
Actor Napolean’s son Dhanush Marriage📸
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 7, 2024
Best Wishes to the Couple💥 pic.twitter.com/RmIkNmYQTn