என் மருமகள் முகம் எப்பவும் இப்படி தான் இருக்கும்!! நெப்போலியன் மனைவி ஓப்பன் டாக்..
நெப்போலியன் மகன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார் நடிகர் நெப்போலியன். தன் மகன் தனுஷுன் உடல்நிலைக்காக அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் சென்று செட்டிலாகினார்.
மகனுக்கு ஏற்றவாறு வீடு முதல் அனைத்தையும் செய்து வைத்து வருகிறார். சமீபத்தில் மகன் தனுஷுக்கு அக்ஷயா என்ற திருநெல்வேலி பெண்ணை மணமுடித்து வைத்தார். ஜப்பானில் மிகச்சிறப்பாக நடைபெற்ற திருமணத்திற்கு கார்த்தி, மீனா, குஷ்பூ, சரத்குமார், ராதிகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மருமகள் முகம்
இந்நிலையில் மருமகள் அக்ஷ்யா குறித்து நெப்போலியன் மனைவி பேட்டியொன்றில் ஓப்பனாக பேசியிருக்கிறார். அதில், எப்போதும் அக்ஷயா சிரிப்பு முகத்துடன் இருப்பாள். அமைதியாக பேசுவாள். அந்த பொறுமை இருந்தால் தான் தனுஷை சரியாக பார்க்க முடியும்.
நான் என்னவெல்லாம் எதிர்ப்பார்த்தேனோ, நிறைய குணங்கள் எனக்கு பிடித்திருந்தது. நான் பொண்ணை பார்த்து பேசுகிறேன், மற்றவர்கள் சொல்வதைவிட நான் பார்த்து பேசவேண்டும் என்று அக்ஷயாவிடம் கேட்டேன்.
விருப்பப்படி நீயா தானே ஒத்துக்கொண்ட, வேற யாராவது கட்டாயப்படுத்தினார்களா என்று கேட்டேன். யாரும் கட்டாயப்படுத்தவில்லை, நானே தான் ஓகே சொன்னேன் என்று அக்ஷயா கூறியதாக நெப்போலியன் மனைவி பகிர்ந்துள்ளார்.