திருமணத்திற்கு முன்பே தொகுப்பாளினியுடன் இரண்டு வருடம் டேட்டிங்!! கைதி நடிகர் நரேன் மனைவி ஓப்பன் டாக்..
இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் நிழலுகுத்து என்ற படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமாகியவர் நடிகர் நரேன். அப்படத்தினை தொடர்ந்து தமிழில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் அறிமுகமாகினார்.
இதனை தொடர்ந்து பள்ளிக்கூடம், அஞ்சாதே, நெஞ்சிருக்கும் வரை போன்ற படங்களில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். முகமூடி படத்தில் மீண்டும் மிஸ்கின் இயக்கத்தில் நடித்தார்.
ஆனால் சரியான வரவேற்பை பெறாமல் இருந்த நரேன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கைதி படத்தில் இன்ஸ்பெக்டர் பிஜாய் என்ற ரோலில் நடித்திருந்தார்.
மேலும் விக்ரம், படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்தார். கடந்த 2007ல் நடிகர் நரேன் தொலைக்காட்சி தொகுப்பாளரான மஞ்சு ஹரிதாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 14 வயதில் தன்மயா மகள் இருக்கும் நிலையில் பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் இரண்டாம் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், நரேன் மனைவி மஞ்சு சமீபத்தில் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியொன்றில், நான் தொகுப்பாளினியாக இருந்த போது நரேனை பார்த்ததாகவும் இரு ஆண்டுகள் இருவரும் டேட்டிங்கில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
[]
2007க்கு பின் தான் திருமணம் செய்து கொண்டோம் என்றும் இப்போது எனக்கு இருக்கும் ஒரேவேலை என் மகன் ஓம்கார்-ஐ பார்த்துக்கொள்வது தான் என்றும் தெரிவித்துள்ளார்.
அவர் நடிக்கும் படத்தின் கதையை குறித்து என்னிடம் எப்போதும் சொல்லுவார். ஆனால் அதை கேட்டுக்கொள்வேன், கதை விசயத்தில் தலையிடமாட்டேன் எனவும் நரேன் மனைவி மஞ்சு ஹர்தாஸ் தெரிவித்துள்ளார்.