சொந்த காசுல சூனியம்! காதல் இயக்குனருக்கு நாமம் போட்ராதீங்க நயன் தாரா..

Nayanthara Samantha Kaathuvaakula Rendu Kaadhal
By Edward Apr 24, 2022 04:08 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. தான் காதலில் விழுந்த இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் சமந்தா விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார்.

இப்படத்தினை ரெளடி பிச்சர்ஸ் தயாரித்து வரும் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது நயன் தாரா இப்படத்திற்கு பிரமோஷனே செய்ய வேண்டாம் என்று கூறியுள்ளாராம்.

தன் படத்தினை தவிர மற்ற எந்த பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் நயன் தாரா கலந்து கொள்ளாமல் இருப்பது ஏற்கனவே சர்ச்சையான ஒன்றாக இருக்கிறது. தற்போது இந்த படம் எப்படி இருக்குமோ என்பதிலும் மிகப்பெரிய அளவில் பிரமோஷன் செய்யப்பட்ட பல படங்கள் தோல்வியை சந்தித்திருக்கிறது.

இந்த படத்திற்கும் அப்படி ஒரு நிலைமை வந்துவிட வேண்டாம் என்ற பயமும் நயன்தாராவிற்கு இருக்கிறது. ஏனென்றால் படத்தின் கதை கொஞ்சம் ஏடாகூடமாக இருப்பதும் அதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் தனது சொந்தத் தயாரிப்பில் மட்டும் விளம்பரத்திற்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் கலந்து கொண்டால் மிகப்பெரிய பிரச்சினை வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமில்லை. இதை தவிர்ப்பதற்காக மட்டுமே நயன்தாரா புரமோஷனுக்கு வர மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.