நயன் கர்ப்பமாக இருக்காங்களா? காதல் இயக்குநர் வெளியிட்ட சந்தோஷமான செய்தியை இப்படியா மாத்துவீங்க..

ladysuperstar nayantara vigneshshivan Koozhangal TigerAward
By Edward Aug 11, 2021 06:13 AM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. அய்யா படத்தில் நடிகையாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் அடுத்தடுத்து நடித்து இந்த இடத்தினை குறுகிய காலத்தில் இடம் பிடித்தார். எவ்வளவுதான் படங்களால் பேர் வாங்கினாலும் சில சர்ச்சையிலும் கிசுகிசுக்களிலும் சிக்கி வந்தார் நயன்.

அந்தவகையில் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேல் தொடர்பில் இருந்து வருகிறார். இருவரும் எங்கு சென்றாலும் ஜோடியாக சென்று வரும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றியும் வருகிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். சமீபத்தில் இருவரும் இணைந்து தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்கள்.

இவர்கள் தயாரித்த முதல் படமான கூழாங்கல் தற்போது சர்வதேச அளவில் முதல் விருதை பெற்றுள்ளது. இதனை அவர்களது சமூக வலைதள பக்கத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் விருது வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். மேலும் விக்னேஷ் சிவன் இயக்குனர் பி எஸ் வினோத் அடுத்ததாக ரோமானியாவில் நடக்கும் சர்வதேச விருது விழாவில் கோலங்களும் படத்தை வெளியிட்டு விருது வாங்கும் முயற்சியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் நயன் தாராவின் அப்புகைப்படத்தை பார்க்கும் சில ரசிகர்கள் நயன் தாரா கர்ப்பமாக இருக்கிறாரா என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்களாம். அதேசமயம் சீக்கிரம் கல்யாணத்த முடிங்க என்றும் சிலர் கருத்துக்களை தெரிவித்தும் வருகிறார்களாம்.

நயன் கர்ப்பமாக இருக்காங்களா? காதல் இயக்குநர் வெளியிட்ட சந்தோஷமான செய்தியை இப்படியா மாத்துவீங்க.. | Nayantara Announced Good News Vignesh Shivan Post