நான் பார்த்த ஆண்கள் இப்படிதான்! விக்னேஷ் சிவன் பற்றி உண்மையை உடைத்த நடிகை நயன்தாரா..

ladysuperstar nayantara vigneshshivan anchordd tamilactress
By Edward Aug 17, 2021 10:40 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகை நயன் தாரா. சமீபத்தில் இவர் நடித்து வெளியான நெற்றிக்கண் படம் நல்லவரவேற்பு பெற்று விமர்சன ரீதியாவும் பேர் பெற்று வருகிறது. அப்படத்தின் பிரமோஷனுக்காக பிரபல தொலைக்காட்சி சேனலில் பேட்டிகொடுத்துள்ளார்.

தொகுப்பாளினி டிடி தொகுத்து வழங்கிய அந்நிகழ்ச்சியில், நான் சாதாரணமாக பார்க்கும் பெரும்பாலான ஆண்கள், நம்ம வொர்க் பண்றது, லைஃப்ல முன்னேறுகிறோம் அதை எப்படி நிறுத்துவது என்று நினைப்பார்கள். என்னை எப்படி இந்த வேலையைவிட்டு தடுப்பது. ஹோம் மேக்கராக இருக்க வைக்க முயல்வது என்று நடந்து கொண்டார்கள் என்று கூறியுள்ளார்.

பெண்களால் சமைக்க, வேலை பார்க்க, குழந்தை பார்க்க, ஷூட்டிங் போக முடியும் என்று கூறி பெண்களை பற்றி பேசியுள்ளார் இதையடுத்து அவர் (விக்னேஷ் சிவன்) வந்த பிறகு தான் அதிகமாக வேலை செய்ய ஆரம்பித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து நயன் தாரா முன்னாள் காதலர்கள் இப்படி நடந்து கொண்டதை தான் கூறியுள்ளாரா என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.