20 வருட சினிமா வாழ்க்கை!! தூக்கிவிட்ட பிரபல இயக்குனருக்கு அல்வா கொடுத்த நயன்தாரா..
தமிழ் சினிமாவில் டாப் நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். அடக்கவுடக்கமாக நடித்து வந்த நயன்தாராவின் கரியரில் மிக முக்கிய படமாகவும் தமிழ் அறிமுகப் படமே அவருக்கு சூப்பர் ஹிட் கொடுத்தது.
இயக்குனர் ஹரி இயக்கத்தில் 2005ல் வெளியான ஐயா படம் தான் நயன் தாராவுக்கு தமிழில் தூக்கிக்கொடுத்த படமாக அமைந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க காரணமாக அமைந்தது. அப்படி அறிமுகப்படுத்திய ஹரியையே ஒரு கட்டத்தில் தூக்கி எறிந்திருக்கிறார் நயன் தாரா.
அதாவது ஐயா படத்தை தொடர்ந்து ஹரி இயக்கி சூப்பர் ஹிட்டான தாமிரபரணி படத்தில் நயன் தாராவை தான் ஹரி முதலில் நடிக்க கேட்டாராம். ஆனால் நயன் தாரா நடிக்க முடியாது என்று தன்னுடைய ஆணவத்தை காட்டியிருக்கிறார்.
அதன்பின் அப்படத்தில் நயன் தாரா லுக்கில் இருக்கும் நடிகை முக்தாவை பானு கேரக்டரில் நடிக்க வைத்திருக்கிறார் ஹரி. இதன்பின் இத்தனை ஆண்டுகளாக ஹரி இயக்கத்தில் நடிகை நயன்தாரா சேரவே இல்லை.