திருமணத்திற்கு பிறகு முதல் பிறந்த நாள்.. நயன்தாராவுடன் இப்படியொரு போஸ் கொடுத்த விக்னேஷ் சிவன்..

Nayanthara Vignesh Shivan
By Edward Nov 18, 2022 08:00 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா. கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு 4 மாதங்களே ஆன நிலையில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தனர். இதன்பின் சில பிரச்சனைகளை தாண்டி தம்பதியினர் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில் நயன் தாரா தற்போது அவரது 38 வது பிறந்தநாளை இன்று ஆரம்பித்துள்ளார். விக்னேஷ் சிவனை திருமணம் செய்து முதல் வருடத்தில் இருவரும் ரொமான்ஸ் செய்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

உன்னுடைய 9வது பிறந்த நாளில் இருக்கிறேன் என்று உருக்கமாக பதிவினை போட்டு ஐ லவ் பொண்டாட்டி என்று கூறி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.