ரஜினி, விஜய், அஜித்துக்கு கூட செய்யாத விஷயத்தை.. 57 வயது நடிகருக்கான செய்யப்போகும் நயன்தாரா

Nayanthara Shah Rukh Khan Jawan
By Kathick Aug 18, 2023 05:00 AM GMT
Report

நயன்தாரா தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். இவர் நடிப்பில் அடுத்ததாக ஜவான் திரைப்படம் வெளிவரவுள்ளது. இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அடுத்த மாதம் 7ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகள் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இதுவரை எந்த ஒரு தென்னிந்திய திரைப்படங்களுக்கும் ப்ரோமோஷனுக்கு வராத நயன்தாரா தற்போது ஜவான் படத்திற்காக ப்ரோமோஷன் செய்ய ஓகே கூறியுள்ளாராம்.

ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எந்த ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியிலும் நயன்தாரா கலந்துகொள்ள மாட்டார்.

இதை அவர் தன்னுடைய கொள்கையாக வைத்துள்ளார். ஆனால், தற்போது தனக்கு பிடித்த நடிகர் ஷாருக்கானுக்காக தனது கொள்கையை நயன் விட்டுக்கொடுக்க போகிறார் என கூறப்படுகிறது.