மேடையில் நயன்தாராவிற்கு முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவன்.. கண்கலங்கிய நயன்..

Nayanthara Vignesh Shivan
By Kathick Sep 16, 2024 01:30 PM GMT
Kathick

Kathick

Report

நயன்தாரா 

நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிலும் தனக்கென்று தனி வரவேற்பை பெற்றார்.

மேலும் தற்போது யாஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்சிக், மண்ணாங்கட்டி, டெஸ்ட், மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட படங்கள் நயன்தாரா கைவசம் உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

மேடையில் நயன்தாராவிற்கு முத்தம் கொடுத்த விக்னேஷ் சிவன்.. கண்கலங்கிய நயன்.. | Nayanthara Cried In Award Stage Photo

இவர்களுக்கு உயிர் உலகம் என இரட்டை குழந்தைகள் உள்ளனர். சினிமாவில் பிசியாக இருந்தாலும் தொடர்ந்து தனது பிள்ளைகளுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார் நயன்.

கண்கலங்கிய நயன்

சமீபத்தில் SIIMA விருது விழா பிரமாண்டமாக நடந்துள்ளது. இதில் சிறந்த நடிகை என அன்னபூரணி படத்திற்காக நடிகை நயன்தாராவிற்கு விருது வழங்கப்பட்டது. அப்போது நயன்தாராவின் காதல் கணவர் விக்னேஷ் சிவன் நயன்தாராவிற்கு நெற்றியில் முத்தமிட, எமோஷனல் ஆன நயன்தாரா கண்கலங்கியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.. 

GalleryGalleryGallery