கோடி கொடுத்தாலும் அதில் நான் கிடையாது! நயன்தாராவின் அதிரடி முடிவுக்கு காரணம் இதுதான்?

tamil movie lover edit
By Jon Jan 31, 2021 06:40 PM GMT
Report

ற்போது கொரானா லாக்டவுன் முடிந்து படப்பிடிப்பிற்கு அனுமதி அளித்ததன் பெயரில் சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் நயன்தாராவுக்குப் பல முறை இந்தியில் நடிக்க அழைப்பு வந்தும் செல்லாமலிருந்தார்.

நீண்ட வருடங்கள் கழித்து சமீபத்தில் இந்தி வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டார். முன்னணி நடிகர் ரன்தீப் ஹூடா இதில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் சமீபத்திய தகவல் நயன்தாரா அந்த வெப் சீரிஸிலிருந்து விலகி விட்டார் என்று கூறப்படுகிறது.

கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகி விட்டாராம். இவர் தமிழில் ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த நவம்பர் மாதம் கொரோனா தளர்வில் தொடங்கியது.

படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்களில் படப்பிடிப்பு தளத்தில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. ரஜினிகாந்த்தும் உடல் நிலை மற்றும் அரசியல் பிரச்சனை காரணமாக ஓய்வில் இருக்கிறார்.

சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகே மீண்டும் படப்பிடிப்பு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், இயக்குநரும் நயனின் காதலருமான விக்னேஷ் சிவனின் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடிக்க கால்ஷீட் ஒதுக்கி இருக்கியிருப்பதால் அந்த சீரிஸில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

நயனுக்கு பதிலாக பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.