பிரபுதேவாவுடன் காதல் முறிவு..சினிமாவைவிட்டு விலக நினைத்த தருணம்!! வைரலாகும் நயன்தாராவின் கண்ணீர் வீடியோ..
நயன்தாரா
தமிழை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்தியா அளவில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. கடைசியாக இவரது நடிப்பில் டெஸ்ட் திரைப்படம் நேரடியாக OTT தளத்தில் வெளியாகி இருந்தது. ஆனால், இப்படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் படுதோல்வி அடைந்தது.
தற்போது படங்கள் நடிப்பதில் பிஸியாக வலம் வரும் நடிகை நயன்தாரா தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டும் வருகிறார். இடையில் இணையத்தில் நயன் தாராவின் பழைய சம்பவங்கள் காதல் விஷயங்கள் பற்றிய தகவலும் வீடியோக்களும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
Sri Rama Rajyam
தற்போது, 2011ல் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிப்பில் நடிகை நயன் தாரா சிதா தேவியாக நடித்த Sri Rama Rajyam படத்தின் ஷூட்டிங் முடிந்த சமயத்தில் நடந்த ஒரு சம்பவ வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
பிரபுதேவாவிடம் இருந்து பிரிந்து சினிமாவே வேண்டாம் என்று வெளியேற நினைத்த சமயத்தில் தான் அந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ளது. தனது கடைசி படமாக அமைந்த அப்படத்திற்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது ராஜா ராணி படம்.
தற்போது Sri Rama Rajyam படத்தின் ஷூட்டிங்கில் கையெடுத்து கும்பிட்டு கண்ணீருடன் அழுத நயன் தாராவின் வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
She was about to retire and marry Prabhudeva at that time.. Sreeramarajyam was supposed to be her last movie. Anduke ee drama appatlo. https://t.co/zPUrPapYfI
— Venkyy 🔱 (@IntrovertGadini) October 15, 2025