பேருக்கு தான் லேடி சூப்பர் ஸ்டார்!! தொடர் தோல்விகளால் கோடியில் சிக்கித்தவிக்கும் நயன்தாரா...
டாப் நடிகையாக தென்னிந்திய சினிமாவில் ஆக்கிரமித்து வரும் நடிகை நயன் தாரா, ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து பாலிவுட்டிலும் காலெடி எடுத்து வைத்திருக்கிறார். இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நயன் தாரா சமீபத்தில் நடிப்பை தாண்டி பல தொழில்களை செய்து வருகிறார்.
காத்து வாக்குல ரெண்டு காதல், ஜவான் போன்ற படங்களில் நல்ல வரவேற்பு வசூல் ரீதியான வரவேற்பும் பெற்றது. ஆனால், விக்னேஷ் சிவனை திருமணம் செய்தப்பின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்த பல படங்களில் அடுத்தடுத்து நடிக்க துவங்கினார்.
அப்படி, திருமணத்திற்கு முன்பும் சரி அதன்பின்பும் சரி பல படங்களில் நடித்து தோல்வியை கொடுத்திருக்கிறார். அந்தவகையில் நிழல், அண்ணாத்த, நெற்றிக்கண், O2, கனெக்ட், இறைவன், நயனின் 75வது படமான அன்னப்பூரணி என்று தொடர் தோல்வியை சந்தித்து தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தினார்.
இதனால் தான் விக்னேஷ் சிவன் இயக்கும் LIC படத்தில் நடித்தும் சசிகாந்த் இயக்கத்தில் டெஸ்ட் படத்தில் நடித்தும் வருகிறார். இப்படியே தோல்வியை கொடுத்து வந்தால், லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை நடிகை திரிஷா ஆட்டையை போட்டுவிடுவார் என்று நெட்டிசன்களும் கலாய்த்து வருகிறார்கள்.
திரிஷா நடிப்பில் பொன்னியின் செல்வன், லியோ படத்தில் நடித்து ஹிட் கொடுத்தார். இதனைதொடர்ந்து கமலில் Thug Life, அஜித்தின் விடாமுயற்சி உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.