மலையாள படத்திற்கு மட்டும் சலுகை? தமிழ் படத்திற்கு கிடையாது.. ஓரவஞ்சனை காட்டும் நயன்தாரா
நடிகை நயன்தாரா, ஒரு படத்தில் நடிக்க ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக சொல்லப்படுகிறது.
ஆனால், மலையாள திரைப்படங்களில் நடிக்க மட்டும் கம்மியான சம்பளம் தான் வாங்கி வருகிறாராம். அதாவது தமிழில் ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வரும் நயன்தாரா, இதிலிருந்து பாதி அளவு தான் மலையாள படங்களில் நடிக்க நயன்தாரா சம்பளமாக வாங்கி வருகிறார் என மூத்த பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.
தன்னுடைய சொந்த மொழியான மலையாளத்தில் நடிக்க கம்மி சம்பளம் வாங்கி வருவதாகவும், தமிழில் நடிக்க ரூ. 10 கோடி ரூ. 12 கோடி சம்பளம் வாங்கி வருவதாகவும் அந்தணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
இதை கேள்விக்கப்பட்ட நெட்டிசன்கள் பலரும், மலையாள சினிமாவிற்கு மட்டும் இப்படியொரு சலுகை, தமிழ் சினிமாவிற்கு மட்டும் ஓரவஞ்சனை காட்டுகிறாரா நயன்தாரா என கூறி வருகிறார்கள்.