சமந்தா, தமன்னாவை தொடர்ந்து நயன்தாரா.. முன்னணி நடிகருடன் குத்தாட்டம்

Nayanthara Samantha Tamannaah Tamil Actress
By Bhavya Dec 16, 2024 07:30 AM GMT
Report

குத்தாட்டம் 

முன்னணி மற்றும் சென்சேஷனலான நடிகைகள் சிறப்பு பாடலுக்கு நடனமாடுவது தற்போது இயல்பான ஒரு விஷயமாக மாறி வருகிறது. புஷ்பா 1 படத்தில் சமந்தாவின் சிறப்பு நடனம் வெகுவாக ரசிகர்களால் பேசப்பட்டது.

சமந்தா, தமன்னாவை தொடர்ந்து நயன்தாரா.. முன்னணி நடிகருடன் குத்தாட்டம் | Nayanthara Going To Dance For One Song

அதை தொடர்ந்து, ஜெயிலர் படத்தில் தமன்னா, சமீபத்தில் வெளிவந்த புஷ்பா 2 படத்தில் ஸ்ரீலீலா என இவர்களின் நடனம் நல்ல வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்று வைரலானது.

முன்னணி நடிகர் 

இந்நிலையில், தற்போது நடிகை நயன்தாராவும் ஒரு சிறப்பு பாடலுக்கு நடமாடவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, பிரபாஸ் நடிப்பில் ஹாரர் கதைக்களத்தில் உருவாகி வரும் ராஜாசாப் படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலுக்கு பிரபாஸ் உடன் இணைந்து நயன்தாரா நடமாடவிருக்கிறாராம். 

சமந்தா, தமன்னாவை தொடர்ந்து நயன்தாரா.. முன்னணி நடிகருடன் குத்தாட்டம் | Nayanthara Going To Dance For One Song

ஆனால், இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை. இதற்கு முன்பு நயன்தாரா 'சிவாஜி, எதிர்நீச்சல்' ஆகிய படங்களில் சிறப்பு பாடலுக்கு நடனமாடி இருப்பது குறிப்பிடத்தக்கது.