அவமானப்படுத்திய அஜித்!! கணவர் விக்கியை வைத்து பெருசா பிளான் போட்ட நடிகை நயன்தாரா..
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா தன் கணவர் மற்றும் இரட்டை குழந்தைகளுடன் மும்பைக்கு சென்று ஜவான் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிஸியாக இருந்து வருகிறார். இதற்கிடையில் தன் குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டும் வருகிறார்.
சமீபகாலமாக நயன் - விக்கி திருமணம் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் தடங்கள் ஏற்பட்டு வருகிறது. பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நடிகை நயன் தாரா கணவருக்காக நடிகர் அஜித்தின் 62-வது படத்தினை இயக்கும் வாய்ப்பினை வாங்கி கொடுத்துள்ளார்.

மனைவி சிபாரிசால் கதையில் கவனம் செலுத்தி அஜித் மற்றும் லைக்கா நிறுவனத்தினம் சென்று கதை கூறியிருக்கிறார் விக்னேஷ் சிவன். ஆனால் கதையை சரிசெய்ய சொல்லி 8 மாதங்களுக்கும் மேலாகியும் அதே கதையை கொண்டு வந்து நீட்டியதால் கடுப்பாகிய அஜித், லைக்கா நிறுவனம் விக்னேஷ் சிவனை 62 படத்தில் இருந்து நீக்கியது.
இதனால் விரக்தியில் இருந்த அஜித் மற்றும் லைக்காவிடம் நயன் தாரா கேட்டும் அவர்கள் இறங்காமல் பேச்சை கேட்காமல் மகிழ்திருமேனியை கமிட் செய்தனர். இதனால் அவமானப்பட்ட நயன் தாரா, எப்படியாவது பழிவாங்க துடித்து வந்தார். அதற்காக தான் கமிட்டாகி 20 கோடி சம்பளமாக பெற்ற படத்தினையும் தூக்கி எறிந்திருக்கிறார் நயன் தாரா.
அதன்பின் தயாரிப்பில் முழு கவனம் செலுத்தவுள்ளதாகவும், பிரதீப் ரங்கநாதனை இயக்கவும், கமல் ஹாசன் தயாரிப்பில் இயக்கவும் விக்னேஷ் சிவனுக்கு யோசனை கூறி நிறைவேற்றி இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க மிகப்பெரிய பிளானை போட்டு சாதித்து இருக்கிறார் நயன் தாரா.

அதாவது பாலிவுட் பக்கம் இருக்கும் நயன் தாரா அங்கிருக்கும் பிரபல இளம் நடிகரிடம் கணவர் விக்னேஷ் சிவனை அறிமுகப்படுத்தி இருக்கிறார். விக்னேஷ் சிவனும் அந்த நடிகரை பார்த்து கதையை கூறியிருக்கிறார். பின் விக்னேஷ் சிவனை படங்களை பார்த்து இம்பிரஸ் ஆகிய அந்த நடிகர் அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளாராம்.
விக்கி இயக்கும் அப்படத்தினை ரெளடி பிச்சர்ஸ் சார்பாக நயன் தாரா தயாரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. கணவருக்காக பல விசயங்களை செய்து வரும் நயன் தாரா, விக்னேஷ் சிவனை விவாகரத்து செய்யப்போகிறார் என்ற செய்தியும் வைரலாகி வரும் சூழலில் இந்த செய்தி அதற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.