முழு நீலாம்பரியாக மாறி நயன் தாரா செய்த செயல்!! தனுஷுக்கு நடந்த அவமானம்..
நயன்தாரா - தனுஷ்
அண்மையில் நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருமண ஆவணப்படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. தனது திருமண வீடியோவிற்காக நெட்பிலிக்ஸ் குழுவிடம் இருந்து நயன்தாரா ரூ. 20 முதல் ரூ. 30 கோடி வரை பணம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் காட்சி 3 நொடி இருந்ததால் தனுஷ் 10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். இதனால் கோபத்தில் நயன் தாரா தனுஷை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
இந்த விவகாரம் பெரியளவில் புகைத்து வந்த நிலையில் இன்று நவம்பர் 21 ஆம் தேதி தனுஷ் தன்னுடைய விவாகரத்து சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகி, விவாகரத்து வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
ஆகாஷ் திருமணம்
இது ஒரு பக்கம் இருக்க, தனுஷ் தயாரிப்பாளர் ஆகாஷ் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். அதே திருமணத்தில் நடிகை நயன் தாரா தன் கணவர் விக்னேஷ் சிவனுடனும் கலந்து கொண்டிருக்கிறார். தனுஷ் - நயன் கலந்து கொண்டாலும் இருவரும் முகத்தை பார்த்துக்கொள்ளாமல் வேறு வேறு பக்கமாக உட்கார்ந்துள்ளனர்.
இந்நிலையில் பத்திரிக்கையாளர் பிஸ்மி நயன்தாரா செய்த செயல் பற்றி ஓப்பனாக பேசியிருக்கிறார். நீலாம்பரி போல் அந்த திருமணத்தில் இருந்த நயன் தாராவை, யாரோ ஒருவர் வீடியோ போட்டுள்ளார் என்று தானே நினைக்கிறோம். ஆனால், அதன் பின்னால், நயன் தாரா சாதூரியமாக செயல்பட்டுள்ளார்.
நயன்தாரா செய்த செயல்
முதலில் தனுஷ் திருமணத்திற்கு வந்து உட்கார்ந்த பின் தான் நயன் தாரா, விக்னேஷ் சிவன் வந்தார்கள். 4 ஷோபா தள்ளி தான் நயன் தாராவுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. அங்கு வந்த நயன்தாரா, தனுஷ் பக்கத்தில் இருந்த ஷோபாவில் உட்கார்ந்துள்ளார். அப்போது உங்களுக்கான இடம் அங்கு என்று சிலர் கூறியிருக்கிறார்கள்.
ஆனால் இங்கு தான் உட்காருவேன் என்று தனுஷ் பக்கத்தில் உட்கார்ந்து கால்மேல் கால் போட்டு உட்கார்ந்துள்ளார் நயன் தாரா. வைரலாகும் வீடியோவையும் நயன் தாரா தரப்பினர் தான் எடுத்து சோசியல் மீடியாவில் வைரலாக்கினார்கள். இதிலிருந்து தனுஷ் மீதான கோபம் ஒரு சதவீதம் கூட குறையவில்லை என்று தெரிகிறது என பிஸ்மி தெரிவித்துள்ளார்.