இயக்குநர் விக்னேஷ் சிவனின் சொத்து இவ்வளவு கோடியா? நயன் தாராவைவிட கம்மிதான்..

Nayanthara Vignesh Shivan Tamil Directors
By Edward Sep 18, 2024 02:30 AM GMT
Edward

Edward

Report

போடா போடி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் இயக்குநர் விக்னேஷ் சிவன். நானும் ரவுடி தான் என்ற சூப்பர் ஹிட் படத்தினை கொடுத்த விக்னேஷ் சிவன், அப்படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை நயன்தாராவை காதலிக்க ஆரம்பித்தார்.

அதன்பின் 7 ஆண்டுகளாக இருவரும் லிவ்விங் வாழ்க்கை வாழ்ந்தப்பின் கடந்த 2022ல் பிரமாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி சில மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

இயக்குநர் விக்னேஷ் சிவனின் சொத்து இவ்வளவு கோடியா? நயன் தாராவைவிட கம்மிதான்.. | Nayanthara Husband Vignesh Shivan Net Worth 2024

ஒரு வயதை தாண்டி வளர்ந்த மகன்களுடன் அவுட்டிங் சென்று புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் விக்னேஷ் சிவன். இன்று செப்டம்பர் 18 ஆம்தேதியோடு விக்னேஷ் சிவன் தன்னுடைய 39வது வயதை எட்டியிருக்கிறார். தற்போது விக்னேஷ் சிவனின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஒரு படத்திற்கு 1 முதல் 3 கோடி வரை சம்பளமாக பெறும் விக்னேஷ் சிவனின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 60 கோடி வரைக்கும் மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவனின் சொத்து இவ்வளவு கோடியா? நயன் தாராவைவிட கம்மிதான்.. | Nayanthara Husband Vignesh Shivan Net Worth 2024

விக்னேஷ் சிவனின் மனைவி நடிகை நயன் தாரா ஒரு படத்தில் 10 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கி வரும் நிலையில், வசென்னை மற்றும் மும்பையில் ரூ. 100 கோடி மதிப்பில் ஆடம்பர பங்களாவை வைத்து இருக்கிறார்.

படங்கள், தயாரிப்பு நிறுவனம், அழகு சாதன தொழில் என கலக்கும் நடிகை நயன்தாராவின் முழு சொத்து மதிப்பு ரூ. 200 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.