என் நடிப்பு உங்களுக்கு பிடிக்கல, மன்னிச்சுடுங்க..மேடையில் தனுஷை அசிங்கப்படுத்திய நயன்தாரா..

Dhanush Nayanthara Gossip Today
By Edward Nov 16, 2024 10:30 AM GMT
Edward

Edward

in Gossip
Report

நயன்தாரா அறிக்கை

நடிகை நயன்தாரா, தனுஷ் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை மிகப்பெரிய அதிர்ச்சியை அனைவரின் மத்தியிலும் எழுப்பியுள்ளது. நயன்தாராவின் திருமணம் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்றது.

என் நடிப்பு உங்களுக்கு பிடிக்கல, மன்னிச்சுடுங்க..மேடையில் தனுஷை அசிங்கப்படுத்திய நயன்தாரா.. | Nayanthara Insult Dhanush In Award Function

திருமணம் முடிந்த பின், நயன்தாராவின் திருமணம் மற்றும் அவருடைய வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாக நெட்பிளிக்ஸ் ஆவணப்படம் ஒன்றை தயார் செய்திருந்தனர்.

இதற்கு தனுஷ் தான் காரணம், தனுஷின் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து NOC கிடைக்கவில்லை என கூறப்பட்டது. நயன்தாரா ஆவணப்படத்தின் நானும் ரவுடி தான் படத்தின் பாடல்கள், காட்சிகள் இடம்பெறுவதால், அதற்கான NOC தனுஷ் தரப்பில் இருந்து வழங்கவேண்டும்.

அது கிடைக்காததால் தான், தாமதம் ஆகிவிட்டது என திரை வட்டாரத்தில் பேசப்பட்டது. இது குறித்து நயன்தாரா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனுஷை கடுமையாக தாக்கியபடி அறிக்கை வெளியிட்டார்.

என் நடிப்பு உங்களுக்கு பிடிக்கல, மன்னிச்சுடுங்க..மேடையில் தனுஷை அசிங்கப்படுத்திய நயன்தாரா.. | Nayanthara Insult Dhanush In Award Function

இந்நிலையில் நானும் ரவுடி தான் படத்திற்காக ஒரு விருது வாங்கிய நயன்தாரா, நன்றி தனுஷ் என்று கூறியும் சாரி தனுஷ், என் நடிப்பு உங்களுக்கு பிடிக்கவில்லை, அடுத்தமுறை சரியாக செய்கிறேன் என்று கலாய்த்தபடி நயன்தாரா மேடையில் கூறியிருக்கிறார். அதற்கு தனுஷும் உடன் இருந்த நடிகர் நடிகைகளில் சிரித்தபடி ரியாக்ஷன் கொடுத்துள்ளனர்.