தெலுங்கில் நடிகை நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா? அடேங்கப்பா

Nayanthara Actress
By Kathick Oct 11, 2024 02:35 AM GMT
Kathick

Kathick

Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவர் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் பிரபலமாகிவிட்டார்.

தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகை நயன்தாரா தமிழ் படங்களில் நடிப்பதற்காக ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என சொல்லப்படுகிறது.

தெலுங்கில் நடிகை நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா? அடேங்கப்பா | Nayanthara Is Highest Paid Actress In Telugu

இந்த நிலையில், தமிழை விட தெலுங்கில் தான் நயன்தாரா அதிக சம்பளம் பெறுகிறார் என லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் நடிப்பதற்காக அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகள் குறித்து பட்டியல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

இந்த பட்டியலில் நடிகை நயன்தாரா தான் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக ரூ. 13 கோடி முதல் ரூ. 14 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என தகவல் தெரிவிக்கின்றனர்.

தெலுங்கில் நடிகை நயன்தாராவிற்கு இத்தனை கோடி சம்பளமா? அடேங்கப்பா | Nayanthara Is Highest Paid Actress In Telugu

இவருக்கு அடுத்தபடியாக அனுஷ்கா, பூஜா ஹெக்டே, ராஷ்மிகா, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.