நயன்தாரா - தனுஷ் இடையே கடும் மோதல்.. திருமணத்திற்கு பின் 2 வருடம் காத்திருப்பு

Dhanush Nayanthara Vignesh Shivan
By Kathick Nov 16, 2024 09:30 AM GMT
Kathick

Kathick

in Celebrity
Report

நயன்தாரா - தனுஷ்

நடிகை நயன்தாரா, தனுஷ் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கை மிகப்பெரிய அதிர்ச்சியை அனைவரின் மத்தியிலும் எழுப்பியுள்ளது. நயன்தாராவின் திருமணம் கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்றது.

திருமணம் முடிந்த பின், நயன்தாராவின் திருமணம் மற்றும் அவருடைய வாழ்க்கையை பதிவு செய்யும் விதமாக நெட்பிளிக்ஸ் ஆவணப்படம் ஒன்றை தயார் செய்திருந்தனர். திருமணத்திற்கு பின் சில மாதங்களிலேயே இந்த ஆவணப்படம் வெளிவரும் என கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து இதனுடைய ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே இருந்தது.

நயன்தாரா - தனுஷ் இடையே கடும் மோதல்.. திருமணத்திற்கு பின் 2 வருடம் காத்திருப்பு | Nayanthara Issues A Letter To Dhanush

இதற்கு தனுஷ் தான் காரணம், தனுஷின் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து NOC கிடைக்கவில்லை என கூறப்பட்டது. நயன்தாரா ஆவணப்படத்தின் நானும் ரவுடி தான் படத்தின் பாடல்கள், காட்சிகள் இடம்பெறுவதால், அதற்கான NOC தனுஷ் தரப்பில் இருந்து வழங்கவேண்டும். அது கிடைக்காததால் தான், தாமதம் ஆகிவிட்டது என திரை வட்டாரத்தில் பேசப்பட்டது.

இந்த நிலையில், வருகிற 18ஆம் தேதி நயன்தாரா ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளிவரவிருக்கும் நிலையில், தனுஷ் குறித்து ஷாக்கிங் அறிக்கையை நயன்தாரா வெளியிட்டுள்ளார்.

அறிக்கை

இந்த அறிக்கையில்: நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் 'Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படத்தை என்னைப் போலவே ஏராளமான எனது ரசிகர்களும், நல விரும்பிகளும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். உங்களது தொடர்ச்சியான பழிவாங்கும் நடவடிக்கைகளால் நானும், எனது கணவரும் மட்டுமன்றி ஆவணப்பட பணிகளில் அர்ப்பணிப்போடு பங்காற்றிய ஒவ்வொருவரும் வெகுவாக பாதிப்படைந்திருக்கிறோம்.

நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் 'Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகளையும், பாடல்களையும், புகைப்படங்களையும் பயன்படுத்தும் வகையில், உங்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் (NOC) பெறுவதற்காக 2 வருடங்களாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு, ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.

நயன்தாரா - தனுஷ் இடையே கடும் மோதல்.. திருமணத்திற்கு பின் 2 வருடம் காத்திருப்பு | Nayanthara Issues A Letter To Dhanush

சமீபத்தில் வெளியான டிரைலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 3 விநாடி வீடியோவிற்கு எதிராய் Legal Notice அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அதிலும், தனிப்பட்ட முறையில் எடுக்கப்பட்ட, ஏற்கனவே இணையதளங்களில் பகிரப்பட்ட ஒரு காட்சிக்கு பத்து கோடி நஷ்ட ஈடு கேட்கப்பட்டு இருப்பது மிகவும் விநோதமானதாகவும் இருக்கிறது.

கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவைதப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்" உள்ளிட்ட பல விஷயங்களை குறிப்பிட்ட நடிகை நயன்தாரா இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGallery