அசிங்கப்படுத்திய நமீதா! சவகாசமே வேண்டாம் என்று இருக்கும் நடிகை நயன்தாரா..
டயானா மரியா குரியன் என்ற பெயரில் மலையாள சினிமாவில் அறிமுகமாகியவர் நயன்தாரா. ஐய்யா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி அடுத்தடுத்த முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்தார்.
டயானா முதல் கண்மணி வரை
மலையாள நடிகையாக வந்தாலும் தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறும் அளவிற்கு அவரது உயர்வும் கோடியில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையுமாக இருக்கிறார். நடிகர் அஜித் எப்படி பேட்டிகள் நிகழ்ச்சிகளை ஒதுக்கி வருகிறாரோ?
அதேபோல் நயன்தாராவும் சில நிகழ்ச்சிகளை தவிர்த்தும் வருகிறார். இப்படி உச்சத்தில் இருக்கும் நடிகை நயன்தாரா காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் தனக்கு ஈக்குவலாக உயரத்தில் இருக்கும் நடிகை சமந்தாவுடன் நடித்திருந்தார். இருவரும் படத்தின் போது தோழிகளாக நட்பாக பழகிய புகைப்படமும் வெளியாகியது.

நமீதாவுடன் அப்படி என்ன பிரச்சனை
ஆனால் அஜித்தின் பில்லா படத்தின் போது நமீதாவுடன் ஏற்பட்ட பிரச்சனைகள் குறித்து பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. பில்லா படத்தில் ஆரம்பத்தில் சகஜமாக இருந்தோம் என்றும் முதலில் நான் தான் அவரிடம் பேசினேன்.
ஆனால் எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. திடீரென என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். எல்லோரும் செட்டில் அமர்ந்து இருக்கும் போது கூட எல்லோருக்கும் ஹாய் சொல்லுவார் என்னை மட்டும் விட்டுவிடுவார். எனக்கு என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்தது.
அவர்கள் தான் அப்படி செய்கிறார்கள் என்றால் அது அவர் பிரச்சனை அதனால் நான் ஒன்னும் பண்ண முடியாது என தெரிவித்தார். அந்த சமயத்தில் திரிஷாவுடன் கூட சஜகமாக தான் பேசுவேன் என்று நயன்தாரா கூறியும் இருக்கிறார்.
#Nayanthara About Problem With #Namitha During #Billa Shoot pic.twitter.com/CKdBzQwhIp
— chettyrajubhai (@chettyrajubhai) June 17, 2022