ஜெயலலிதா, ரஜினிலாம் ஓரமா போங்க? ஆசை கணவருக்காக இப்படியொரு வீட்டை கட்டும் நயன்தாரா...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராகவும் விளங்குபவர் நடிகை நயன் தாரா. ஐய்யா படத்தில் ஆரம்பித்த சினிமாவாழ்க்கையில் பல கஷ்டங்களை தாண்டி இந்த இடத்திற்கு நயன் தாராவை கொண்டு வந்திருக்கிறது.
காதல் முதல் கல்யானம் வரை
காதல் தோல்வி என சர்ச்சையில் சிக்கி மீண்டு வந்த நயன் தாரா இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடி தான் படத்தின் மூலம் மீண்டும் லேடி சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்தார். அதன்பின் விக்னேஷ் சிவன் மீது நட்பாக இருந்தது பின் காதலாக மாறியது. இருவரும் தீவிரமாக காதலித்து வந்த நிலையில் ஜோடியாக அங்கும் இங்குமாக சுற்றி வந்தனர்.
எப்போது திருமணம் என்று கடந்த 7 ஆண்டுகளாக கேள்வியாகவே இருந்து வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க காத்து வாக்குல ரெண்டு காதல் கடந்த ஆண்டே வெளியாகும் நிலையில் இருந்தது. அப்போது திருமணத்தை வைக்கலாம் என்று நயன் - விக்கி முடிவெடுத்தனர்.
ஆனால் படம் தள்ளி மே மாதம் வரை சென்றது. தற்போது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது நயன் தாரா ஜூன் 9 ஆம் தேதிக்கு திருமணம் செய்யலாம் என்று விக்னேஷ் சிவனிடம் சம்மதம் தெரிவிக்க மிகவும் ஹாப்பியாக திருமண ஏற்பாட்டினை செய்திருந்தார்.
பிரம்மாண்ட வீடு
இதையடுத்து ஜூன் 9 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் திருமண வீடியோ கவரை நெட்பிளிக்ஸ் நிறுவனம் 25 கோடி அளவில் வாங்கி திருமணத்தை முடித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு நயன் தாரா தன் கணவரை கேரளாவுக்கு கூட்டிச்சென்று அம்மாவிடம் ஆசிபெற்றார்.
அதன்பின் தாய்லாந்து ஹனிமூன் சென்று ஒரு வாரத்திற்கு பிறகு இந்தியா திரும்பினார்கள். இங்கு வந்தது நயன் தாரா அப்படியே காரை ஜவான் படப்பிடிக்கு சென்றார். இந்நிலையில் ஆசை கணவருக்கு போயஸ் கார்டனில் 25 கோடி மதிப்பிலான இரண்டு பிளாட்களை வாங்கி கொடுத்துள்ளார்.
ஜிம், தியேட்டர்
இதனை மிரம்மிப்பாக பார்க்க வேண்டும் என்று ஒரு பிளாட் 8250 ஸ்கொயர் ஃபீட் கொண்டு மொத்தம் 16500 ஸ்கொயர் ஃபீட்டிற்கு ஏற்றபடி வீட்டினை அமைக்க திட்டமுட்டுள்ளார் நயன். அதற்காக ஷாருக்கான், சச்சின் போன்றவர்களின் வீட்டினை வடிவமைத்த இன்ட்டிரீயர் டெக்ரேஷனுக்காக மும்பையில் இருந்து பிரபலமான நிறுவனத்தை வரவழைக்கவுள்ளார்கள்.
போயஸ் கார்டனில் ஜெயலலிதா இருந்த பிளாட்டிற்கு பின் புறம் தான் நயன் தாரா விக்னேஷ் சிவனின் பிளாட் இருக்கிறதாம். அப்படியே ஜெயலலிதா, ரஜினிகாந்திற்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு அந்த வீட்டில் தியேட்டர், ஜிம் உள்ளிட்ட பல பிரம்மாண்ட சொகுசு விசயங்கள் உள்ளட்டக்கவுள்ளார்களாம்.