நயன்தாரா சொந்தமாக வைத்துள்ள பிரைவேட் ஜெட் விலை இத்தனை கோடியா!! அடேங்கப்பா
Nayanthara
By Karthick Raja
தென்னிந்திய திரையுலகில் முன்னணி ஹீரோக்கள் பிரைவேட் ஜெட்டில் பயணிப்பதை நாம் அறிவோம். ஆனால், சொந்தமாக பிரைவேட் ஜெட் வைத்துள்ள ஒரே ஒரு தென்னிந்திய நடிகை நயன்தாரா மட்டும்தான்.
இந்த பிரைவேட் ஜெட் மூலம்தான், கணவர் விக்னேஷ் சிவன் மற்றும் குழந்தைகளுடன் படப்பிடிப்பு, வெக்கேஷன் என சென்று வருகிறார் நயன்தாரா என கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா சொந்தமாக வைத்துள்ள பிரைவேட் ஜெட் மதிப்பு சுமார் ரூ. 50 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.
இதை வெறும் ஆடம்பரம் மட்டுமல்லாமல், ஒரு பெண் தனது கடின உழைப்பால் எந்த உயரத்தையும் தொட முடியும் என நிரூபித்து காட்டியுள்ளார் நடிகை நயன்தாரா.
