திருமணமாகி ஒரு வருடமாகாத நிலையில் இப்படியொரு முடிவா!! நயன்தாராவின் திடீர் முடிவால் ஷாக்காகும் ரசிகர்கள்
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான படங்கள் ஓரளவிற்கு தான் வெற்றியை பெற்றது.

தற்போது ஜவான் உள்ளிட்ட ஒருசில படங்களில் கமிட்டாகி நடித்து பிஸி கால்ஷீட்டில் இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டு விக்னேஷ் சிவனை காதலுத்து திருமணம் செய்த நயன் தாரா, 4 மாதத்திற்கு பிறகு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்றெடுத்தார்.
ஜவான் உள்ளிட்ட பல படங்களின் ஷூட்டிங் நடக்கும் போது, குழந்தைகளுடன் கிடைக்கும் நேரத்தில் நேரத்தை செலவிட்டும் வருகிறார். இந்நிலையில் நடிகை நயன் தாரா சினிமாவில் இருந்து விலகவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தன்னுடைய இரட்டை குழந்தைகளை பார்த்துக்கொள்ள வேண்டி இருப்பதால் தான் அந்த முடிவை எடுக்கவுள்ளாராம் நயன் தாரா.
கைவசம் இருக்கும் படங்களை முடித்துவிட்டு, நடிப்பை ஓரங்கட்டி தயாரிப்பில் கவனம் செலுத்தவுள்ளாராம். இந்த தகவல் தற்போது நயன் தாரா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.