தன்னை விட 19 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்க நோ சொன்ன நயன்தாரா.. ஆனால்

Nayanthara Shah Rukh Khan
By Kathick May 13, 2025 03:32 AM GMT
Report

நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடித்த முதல் பாலிவுட் திரைப்படம் ஜவான். இப்படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நயன் நடித்திருந்தார். நயன்தாராவை விட ஷாருக்கான் 19 வயது மூத்தவர் ஆவார்.

இப்படத்தில் இவர்கள் இருவருடைய ஜோடி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், முதன் முதலில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்க இதற்குமுன் நயன்தாரா நோ சொன்ன கதை எத்தனை பேருக்கு தெரியும்.

தன்னை விட 19 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்க நோ சொன்ன நயன்தாரா.. ஆனால் | Nayanthara Rejected Shah Rukh Khan Movie Chance

ரோகித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வெளிவந்த திரைப்படம் சென்னை எக்ஸ்பிரஸ். இப்படத்தில் தீபிகா படுகோன் கதாநாயகியாக நடித்திருப்பார். ஆனால், முதன் முதலில் இந்த ரோலில் நடிக்கவிருந்தது நடிகை நயன்தாரா தானாம்.

படத்தின் கதை தென்னிந்தியாவில் நடக்கும்படி அமைந்திருந்ததால், அப்போது தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருந்த நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால், இந்த வாய்ப்பை நயன்தாரா மறுத்துவிட்டாராம்.

தன்னை விட 19 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாக நடிக்க நோ சொன்ன நயன்தாரா.. ஆனால் | Nayanthara Rejected Shah Rukh Khan Movie Chance

காரணம், நயன்தாரா அந்த சமயத்தில் தனது திரை வாழ்க்கையில் சில முக்கியமான முடிவுகளை எடுத்து வந்ததாகவும், புதிய பாலிவுட் படத்தில் உடனடியாக நடிக்க ஒப்புக்கொள்ள தயங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுமட்மின்றி கால்ஷீட் பொருந்தாததும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இதனால் நயன்தாரா அந்த படத்தில் நடிக்கவில்லை. ஆனால், பின் பல ஆண்டுகள் கழித்து ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்தார்.