சமந்தா, காஜல் நிழலைக்கூட சீண்ட முடியாத நயன் தாரா!! அதுக்கு ஒரு தில் வேணும்!!
தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. ஐய்யா படத்தில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கை அடுத்தடுத்த படங்கள் மூலம் தன்னுடைய இடத்தினை நிர்ணயித்து நடித்து வந்தார்.
அப்படி தமிழ், தெலுங்கு என முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்த நயன் தாரா நடிப்பில் கவனம் செலுத்து ரசிகர்களை ஈர்க்கவே பாடுபட்டு வந்தார். ஆனால் மற்ற நடிகைகளோ இணையத்தில் அதிலும் ஆக்டிவாக இருக்கும் சமுகவலைத்தள பக்கத்தில் எதாவது ஒரு பதிவினை போட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுப்பார்கள்.
அதில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் தான் நடிகை சமந்தா. நயன் தாரா அறிமுகமாவதற்கு பின் தான் சமந்தா அறிமுகமாகி முன்னணி நடிகை என் தென்னிந்திய சினிமாவையே ஆட்டிப்படைத்து வருகிறார். அதிலும் சமந்தா எந்த பதிவினை போட்டாலும் மில்லியன் கணக்கில் லைக் பெற்று ரசிகர்களை ஈர்த்தும் வருவார்.
20 மில்லியனுக்கு மேல் சமந்தாவுக்கு அடுத்த இடத்தில் நடிகை காஜல் அகர்வாலும் ஆக்டிவாக இருந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார். ஆனால் நயன் தாரா லேடி சூப்பர் ஸ்டாராக இருந்தும் சமுகவலைத்தள பக்கத்தில் ஈடுபாடு இல்லாமல் இருந்து வருகிறார்.
ஏற்கனவே இணையத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன் தாராவின் நடிப்பைவிட சமந்தாவின் நடிப்பை தான் ரசிகர்களை ஈர்த்து வருகிறது என்று கூறப்படுகிறது. அதற்கு காரணம் நயன் தாராவின் வயதும் சுருங்கி போகும் உடல் தோற்றமும் தான் காரணம்.
இதனால் சமந்தா தான் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் இடத்தினை பிடிப்பார் என்று திருமணத்திற்கு பிறகு நயன் தாரா மார்க்கெட்டினை கொஞ்சம் கொஞ்சமாக இழப்பார் என்று இணையத்தில் ரசிகர்கள் விமர்சித்தும் கலாய்த்தும் வருகிறார்கள்.