மார்க்கெட் இழந்த நடிகைன்னு நியாபகம் வெச்சுக்கோங்க!! நயன் தாராவுக்கு பதிலடி கொடுத்த பிஸ்மி..
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தன் கணவர் மற்றும் குழந்தைகளுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
சமீபத்தில் தன்னுடைய திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடி தான் படத்தின் சில நொடி காட்சியை வைத்தது தொடர்பாக தனுஷ் மீது கோபத்தில் இருந்து வருகிறார்.
3 குரங்கள்
இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியொன்றில், பிரபல சினிமா விமர்சகர்களை கெட்டதை பார்க்காதே, கெட்டதை கேட்காதே, கெட்டதை பேசாதே என 3 குரங்கள் பற்றி நமக்கு தெரியும். ஆனால் கெட்டதை பேசு, கேட்டதை கேளு, கெட்டதை பார் என சொல்லும் 3 குரங்குகள் என்னை பற்றி 50ல் 45 வீடியோவில் பேசி வருகிறார்கள்.
ஏனென்றால் என்னை பற்றி தப்பாக பேசி சம்பாதித்து வருகிறார்கள். என்னை பற்றி தப்பாக பேசி சம்பாதித்து சிலர் சாப்பிட்டால் எனக்கு சந்தோஷம் தான். அவங்க சம்பாதித்தாலும் சரி, தனுஷ் சம்பாதித்தாலும் சரி எனக்கு ஹாப்பி தான் என்று பேசியிருக்கிறார்.
பதிலடி
இது குறித்து பிஸ்மி, 50 வீடியோ நாம் போட்டால் 45 வீடியோவில் அவரை பற்றி பேசுகிறோம் என்று கூறுவதெல்லாம் அப்பட்டமான பொய். கடந்த சில மாதங்களாக 2 வீடியோ 3 வீடியோவில் தான் நயன் தாராவை பற்றி பேசி இருக்கிறோம்.
நெக்ட்டிவ் ஆக நாம் பேசவில்லை, படத்தின் அப்டேட்களை தான் கூறியிருக்கிறோம் என்றும் நீங்கள் ஒரு மார்க்கெட் இழந்த நடிகை என்பதை நியாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என்று பிஸ்மி தெரிவித்துள்ளார்.
Reply from Valaipechu to #Nayanthara's yesterday interview pic.twitter.com/JcQ8ARPEv4
— AmuthaBharathi (@CinemaWithAB) December 12, 2024