நயன்தாரா ஏர்போர்ட்டில் அப்படி பண்ணுவாங்கன்னு நினைக்கல!! பிரபலம் ஓபன் டாக்..
நயன்தாரா
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. பல படங்களில் கமிட்டாகி நடித்து வரும் நயன் தாரா, கிடைக்கும் நேரத்தில் தன்னுடைய இரட்டை மகன்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில் நடிகர் அஜித் கலந்து கொண்ட கார் ரேஸை பார்க்க சென்றிருந்தார்.

இதனையடுத்து சில நாட்களுக்கு முன் துபாய் ஏர்போர்ட்டில் பிரபல சினிமா விமர்சகர்களான அந்தணன், பிஸ்மி, சக்தி ஆகியோரை சந்தித்துள்ளார். அப்போது அவர்களுடன் நயன் தாராவின் மகன்கள் தமிழில் நன்றாக உரையாடினர். சில வருடங்களுக்கு முன் 3 பேரையும் விமர்சித்து நயன் தாரா பேசியதையடுத்து, அவர்களை எந்தவொரு முக சுளிப்பும் இல்லாமல் நயன் தாரா சந்தித்து பேசினார்.
அப்படி பண்ணுவாங்கன்னு
இதுகுறித்து பிஸ்மி, நாங்க மூணு பேரும் ஒரு நிகழ்ச்சிக்காக துபாய் போயிருந்தோம். அதே சமயம் நயன்தாராவும் துபாய்ல தான் இருந்தாங்க. ரெண்டு பேரும் ஒரே ஃப்ளைட் தான். அப்போ ஏர்போர்ட்டில எதேச்சையா சந்திச்சோம், பேசும்போது கோபம் இருந்ததா? யாருக்காவது டென்ஷன் இருந்ததா?"ன்னு கேட்டதுக்கு, பிஸ்மி சொன்ன பதில் செம்ம ட்விஸ்ட்.

சொல்லப்போனா எங்களைவிட நயன்தாரா தான் கோபமா இருக்க வேண்டியவங்க. ஏன்னா அவங்க ஒரே ஒரு பேட்டியில தான் எங்களைப் பற்றி பேசினாங்க. நாங்க தான் ஆயிரம் தடவை அவங்களைப் பற்றி சேனல்ல பேசி இருக்கோம், அவங்க நினைத்திருந்தால் எங்களை பார்த்ததும் முகத்தை திருப்பியிருக்கலாம், ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்ல, சிரிச்சு, நல்லா பேசினார்கள் என்று பிஸ்மி கூறியிருக்கிறார்.