அடுத்த பிளான் குழந்தை தான்.. ஹனிமூனுக்கு பின் அம்மாவாகப் போகும் நடிகை நயன்தாரா..

Nayanthara Vignesh Shivan Marriage
2 நாட்கள் முன்
Edward

Edward

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வரும் நடிகை நயன் தாரா, ஷாருக்கானின் ஜவான் படத்தில் பிஸியாக நடித்து வந்தார். இடையில் 7 வருடங்களாக காதலித்து வந்த விக்னேஷ் சிவனை ஜூன் 9 ஆம் தேதி பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டார்.

அடுத்த பிளான் குழந்தை தான்.. ஹனிமூனுக்கு பின் அம்மாவாகப் போகும் நடிகை நயன்தாரா.. | Nayanthara Vignesh Practice For Future Children

8 வருட காதல் மற்றும் திருமணம்

தற்போது ஸ்பெயின், துபாய் ஹனிமூனை முடித்து தற்போது இந்தியா பக்கம் திரும்பி இருக்கிறார்கள் காதல் தம்பதியினர். திருமணத்திற்கு முன் போயஸ் கார்ட்னரில் 20 கோடிக்கும் மேல் மதிப்புள்ள 2 பிளாட்டினை வாங்கினார்.

20 வருட சினிமா வாழ்க்கையில் சுமார் 150 கோடிக்கும் மேல் சொத்து வைத்திருக்கும் நயன், ஹதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இரு பங்களாக்களை நயன்தாரா ஜோடி சுமார் 15 கோடி மதிப்பில் வாங்கி இருக்கிறார்கள்.

அடுத்த பிளான் குழந்தை தான்.. ஹனிமூனுக்கு பின் அம்மாவாகப் போகும் நடிகை நயன்தாரா.. | Nayanthara Vignesh Practice For Future Children

பிறந்த நாள் பரிசு

இந்நிலையில் தன்னுடைய பிறந்தநாளுக்கு நயன் தாராவுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். 8 வருடமாக இந்த பிறந்த நாளை கொண்டாடி வருகிறேன் என்று நயன் தாரா நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.

தற்போது 3 குட்டி சிறுவர்களுடன் நயன் தாரா மற்றும் விக்னேஷ் சிவன் புகைப்படம் எடுத்துள்ளனர். அதை விக்னேஷ் சிவன் அவரது இன்ஸ்டா ஸ்டோரியில், வருங்காலத்திற்கான பயிற்சி என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு ஒரு பதிவினை போட்டுள்ளார்.

இதன்மூலம் அடுத்த வருடமே நயன் தாரா குழந்தை பெற்றுக்கொள்வார் என்று சூசகமாக விக்னேஷ் சிவன் கூறியுள்ளதாக பலர் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.

Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.