ஜோதிகாவும் இதை தான் 5 வருஷமா செஞ்சாங்க? நயன்தாரா விசயத்தில் மூக்கை நுழைத்த டாக்டர்..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாகவும் தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. பல வருடங்களாக தான் காதலித்து லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை ஜூன் 9 ஆம் தேதி திருமணம் செய்து கரம் பிடித்தார்.
நயன் - விக்கி திருமணம்
மகாபலிபுரத்தில் இருக்கும் ஒரு ரெசாட்டில் பிரம்மாண்டமாக கடும் பாதுகாப்புடன் திருமணம் நடைபெற்றது. முக்கிய நட்சத்திரங்களுக்கும் உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லீ, அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்து கூறினார்கள்.
இப்படி பலரின் வாழ்த்துக்களுடன் நயன் - விக்கி திருமணம் முடிந்தப்பின், இருவரும் கோவில் கோவிலாக சென்று ஆசிபெற்றும் வருகிறார்கள்.
மூக்கை நுழைத்த மருத்துவர்
இந்நிலையில் நயன் தாரா இந்த வயதில் திருமணம் செய்து கொண்டதை அறிவன்பன் திருவள்ளுவன் என்ற மருத்துவர் கூறிய கருத்து சர்ச்சையாகியிருந்தது. நயன் தாராவின் நடிப்பில் மதிப்பு உள்ளது. ஆனால் 40 வயது பாட்டிக்கு குடும்பம், குழந்தை என அவர் எடுத்திருக்கும் செயலை பார்த்தால் பாவமாக இருக்கிறது.
ஐவிஎஃப் மையங்கள் தான் அவருக்கு உதவ முடியும் என்ற கருத்தினை கூறியிருந்தார். இதற்கு சின்மயி உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தும் கடுமையாக திட்டியும் வந்தனர். இதனை அடுத்து மன்னிப்பு கேட்டு ஒரு பதிவினையும் பகிர்ந்துள்ளார் அந்த மருத்துவர்.
மன்னிப்பு கேட்ட மருத்துவர்
என் சக மருத்துவரான அனுஷா கார்த்திக்குடன் இது பற்றி பேசியபோது பதிவிட்ட கருத்து தான் இது. உங்களின் மனதை புண்படுத்தியிருந்தால் என்னை மன்னித்து விடுங்கள். எந்த பெண்ணின் கருமுட்டையும் 30 வயதுக்கு மேல் வலுவிழந்துவிடும்.
5 வருடங்களுக்கு ஓய்வு எடுத்து குடும்பம் குழந்தை என பார்த்துக்கொண்ட ஜோதிகாவின் முடிவை நாங்கள் பாராட்டி சாட் செய்திருந்தோம். நான் நயன் தாராவின் ரசிகர் தான். அவர் மீது ஒரு அக்கறையில் தாமதமாக செய்த திருமணத்தை பற்றி கருத்து கூறியிருந்தேன்.
மீண்டும் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஒரு கருத்து கூறியதால் ஒருவரை தவறாக ஜட்ஜ் பண்ண வேண்டாம் என்று சின்மயி போன்றவர்களை கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.