அடுத்த டார்கெட் இந்த நடிகையா!! நயன்தாராவுக்கு போட்டியாக இன்னொரு டாப் நடிகையை தட்டிதூக்கிய அட்லீ..
தென்னிந்திய லேடி சூப்பர் ஸ்டாராக இருந்து பல சர்ச்சைகளுக்கு மத்தியிலும் தன் திறமையால் டாப் இடத்தினை பிடித்துள்ளவர் நடிகை நயன் தாரா. தற்போது ஜவான் படத்தில் நடித்து பாலிவுட்டிலும் காலெடி எடுத்து வைத்துவிட்டார்.
ஜவான் படத்தில் அவரின் லுக் பார்ப்பவர்களை மிரட்டிவிட்ட நிலையில் அப்படத்தில் சுமார் 10 கோடி சம்பளமாக வாங்கியிருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன் தாரா திகழ்ந்தும் இதனால் அவரது மார்க்கெட்டையும் ஏற்றியிருக்கிறார்.
இப்படியொரு நிலையில் நயன் தாராவுக்கு போட்டியாக தற்போது நடிகை கீர்த்தி சுரேஷும் அதிக சம்பளத்தை ஏற்றியிருக்கிறார். தற்போது கிளாமர் ரூட்டுக்கும் மாறியிருப்பதால் கீர்த்தி சுரேஷ் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி இருக்கிறார். ஒரு படத்திற்கு 3 கோடி வரை சம்பளமாக பெறும் கீர்த்தி தற்போது 3 மடங்கு அதிகரித்து 6 கோடி சம்பளமாக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இயக்குனர் அட்லீ ஜவான் படத்திற்கு பின் வருண் தவானை வைத்து தெறி படத்தின் ரீமேக்கை பாலிவுட்டில் இயக்கவுள்ளார். இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷை தான் பாலிவுட்டில் அட்லீ அறிமுகப்படுத்தவுள்ளாராம்.
இப்படத்தில் வருண் தவானுடன் நடிக்க கீர்த்தி சுரேஷ் கமிட்டாகினார் அப்படத்தின் மூலம் தன்னுடைய சம்பளத்தை நயன் தாராவுக்கு இணையாக உயர்த்திவிடுவார் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே சமந்தாவும் பாலிவுட் பக்கம் சென்றிருப்பதால் கீர்த்தி சுரேஷ், ஆக்ஷன், கிளாமர் என தன்னை மாற்றவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Exciting Buzz ?#KeerthySuresh is all set to make her Bollywood debut opposite #VarunDhawan. Varun will be portraying the role of a police officer in this film, which is reported to be the Hindi remake of #Atlee & #ThalapathyVijay’s blockbuster #Theri ???? pic.twitter.com/trEfo3Z6cW
— KARTHIK DP (@dp_karthik) July 18, 2023
