மீண்டும் நடிக்க வந்த நடிகை நஸ்ரியா.. ரசிகர்களை கவர அப்படியொரு போட்டோஷூட்

Nazriya Nazim Photoshoot
By Kathick Jun 13, 2022 08:45 PM GMT
Report

நேரம் படத்தின் மூலம் இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை நஸ்ரியா. இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.

அதிலும், இன்று வரை நஸ்ரியா என்றால் அனைவருக்கும் நியாபகம் வருவது, அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ராஜா ராணி திரைப்படம். நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொண்ட நடிகை நஸ்ரியா, திருமணத்திற்கு பின் நடிக்கவில்லை.

ஆனால், தற்போது மீண்டும் பல ஆண்டுகளுக்கு பின் அடடே சுந்தரா எனும் படத்தின் மூலம் நடிக்கவந்துள்ளார் நடிகை நஸ்ரியா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், மீண்டும் நடிக்க வந்துள்ளதால், ரசிகர்களை கவர மற்ற நடிகைகளை போல், நடிகை நஸ்ரியாவும் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நஸ்ரியாவின் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

GalleryGalleryGallery