கஷ்டத்தை சொல்ல முடியாமல் தவிக்கும் நடிகை நஸ்ரியா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..
ஃபகத் பாசில் - நஸ்ரியா
மலையாள சினிமாவை தாண்டி தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து மிகப்பெரிய நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஃபகத் பாசில். நடிகை நஸ்ரியாவை காதலித்து திருமணம் செய்த ஃபகத் பாசில், க்யூட் ஜோடிகளாக திகழ்ந்து வருகிறார்கள். சமீபகாலமாக நஸ்ரியா வெளியுலகத்திற்கும் இணையத்திற்கும் வராமல் இருந்து வந்தார். இந்நிலையில் நடிகை நஸ்ரியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை பகிர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நஸ்ரியா அறிக்கை
அதில், அனைவருக்கும் வணக்கம், நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்க்ள் என்று நம்புகிறேன். நான் ஏன் சில காலமாக தொடர்புகொள்ள முடியாத சூழலில் இருந்து வருவது பற்றி உங்களிடம் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். எல்லோரும் தெரியும் நான் சமூகவலைத்தளத்தில் எந்தளவிற்கு ஆக்டிவாக இருப்பேன். ஆனால் கடந்த சில நாட்களாக எமோஷ்னல் வெல்பீயிங் மற்றும் தனிப்பட்ட சவால்களுடன் போராட்டி வருகிறேன்.
இதனால் யாருடனும் பேசமுடியாத தூரத்தில் இருக்கும் நிலை ஏற்பட்டது. எனக்கு அழைப்பு விடுத்தவர்கள், என் பதிலுக்காக காத்திருந்த அனைவருக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இக்கட்டான சூழலில் என் 30வது பிறந்தநாளை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டது. Sookshma Darshini படத்தின் வெற்றிவிழாவிற்கு வரமுடியாமல் போனது. இதற்கெல்லாம் மன்னிப்பு கோருகிறேன்.
நான் கூடிய விரைவில் மீண்டு வருவேன். இப்போது நான் நன்கு குணமடைந்து வருகிறேன். அதற்கு அதிக நேரங்கள் ஆகலாம், இதை புரிந்துக்கொண்டு ஆறுதல் தெரிவிப்பவர்களுக்கு நன்றி என்று நஸ்ரியா தெரிவித்துள்ளார். இதனை பார்த்து பலரும் ஆறுதல் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
கடந்த ஆண்டு ஆவேசம் பட வெற்றிவிழாவில் நடிகர் ஃபகத் பாசில், தனக்கு Attention deficit hyperactivity disorder (ADHD) என்கிற மூளையின் கட்டுப்பாடோடு தொடர்புடைய பிரச்சனை இருப்பதாகவும் கூறியிருந்தார். இதனால் தான் நஸ்ரியா இப்படி கூறியிருக்கிறாரா? அல்லது அவருக்கு உடல்நிலையில் கொஞ்சம் பிரச்சனை இருக்கிறதை அப்படி கூறுகிறாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.