அந்த நடிகருடன் லிப்லாக்!! முடிந்ததும் டெட்டால் ஊற்றி வாயை கழுவிய பிரபல நடிகை

Indian Actress Actress
By Edward Jun 27, 2023 07:15 PM GMT
Report

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக 80களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை நீனா குப்தா. முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நீனா குப்தா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களிலும் நடித்து வந்தார்.

அந்த நடிகருடன் லிப்லாக்!! முடிந்ததும் டெட்டால் ஊற்றி வாயை கழுவிய பிரபல நடிகை | Neena Gupta Rinsed Her Mouth Dettol After Liplock

தற்போது வெப் தொடர்களில் நடித்து வரும் நீனா, ஆந்தாலஜி படமான லஸ்ட் ஸ்டோரிஸ் 2வில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நடிகர் ஒருவருடன் முத்தக்காட்சியில் நடித்தது குறித்து பகிந்துள்ளார்.

பல வருடங்களுக்கு முன் நடிகர் திலீப் தவானுடன் ஒரு சீரியலில் நடித்திருந்தேன். அந்த சீரியலில் தான் முதன் முதலில் உதட்டோடு முத்தம் கொடுக்கும் காட்சி தொலைக்காட்சியில் நடந்தது. அதில் நான் தான் நடித்தேன்.

அந்த நடிகருடன் லிப்லாக்!! முடிந்ததும் டெட்டால் ஊற்றி வாயை கழுவிய பிரபல நடிகை | Neena Gupta Rinsed Her Mouth Dettol After Liplock

அந்த காட்சியை நினைத்து இரவு முழுவதும் நான் தூங்கவில்லை என்றும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அதற்கு நான் தயாராகவும் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் நான் மிகவும் பதட்டத்தோடு இருந்து அதை சமாளிக்க என்னை சமாதானப்படுத்திக் கொண்டேன்.

கேமரா முன் சிலரால் நகைச்சுவை செய்யமுடியாது, சிலரால் அழமுடியாது. நான் முத்தக்காட்சியில் பதட்டமுடன் நடித்தப்பின் டெட்டால் கொண்டு வாயை சுத்தம் செய்தேன்.

தெரியாத ஒருவருடன் முத்தமிடுவது மிகவும் கடினமாக எனக்கு இருந்ததாக கூறியிருக்கிறார் நடிகை நீனா குப்தா.