அந்த மாதிரி பொண்ணான்னு கேக்குறாங்க!! நீனா நானா நிகழ்ச்சியில் பேசிய இளம்பெண்..
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் நிகழ்ச்சி நீயா? நானா?. பல தலைப்புகளை மையப்படுத்தி விவாதிக்கப்படும் இந்நிகழ்ச்சியில் சமீபகாலமாக ஒளிப்பரப்பாகும் எபிசோட்டுகள் பெரியளவில் பேசப்பட்டு வருகிறது.
அந்தவகையில் வரும் ஞாயிறு அன்று ஒளிப்பரப்பாகும் நியா? நானா நிகழ்ச்சியில் நீளமான முடி வைத்திருக்கும் பெண்கள் மற்றும் நீள கூந்தல் பெண்களுக்கு தேவையில்லாதது என சொல்லும் பெண்களை வைத்து நடத்தப்பட்டது.
இருவரின் தரப்பும் சரியாக சென்று கொண்டிருக்கும் போது ஷார்ட் ஹேர் வைத்திருந்த பெண் ஒருவர், என் முடியை பார்த்து டாம் பாய்-ஆ, லெஸ்பியனா என்று பல விதத்தில் கேள்வியாக கேட்கிறார்கள்.
மேலும் ஒரு பெண், பெண்ணோட வாழ்க்கை திருமணத்தோடு முடிந்துவிடுமா, கல்யாணம் தான் முக்கியமா என்று சரமாறியாக கேட்க, கோபிநாத் அமைதியாக கேட்டுள்ள பிரமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.