நீயா நானாவில் பட்டியலின பெண் சொன்ன வார்த்தை!! கோபிநாத்-ஆல் வாயடைந்த அரங்கம்..
நீயா நானா
விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார் தொகுப்பாளர் கோபிநாத். இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் நகரத்து மாப்பிள்ளையை மணமுடிக்க ஆசைப்படும் கிராமத்து பெண்கள் மற்றும் ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த கிராமத்து அம்மாக்கள் கலந்து கொண்டு விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பட்டியலின பெண் ஒருவர் சொன்ன ஒரு வார்த்தையை வைத்து கோபிநாத் கிராமத்து அம்மாக்களை பதில் அளிக்க முடியாமல் திணறடித்துள்ளார்.
கிராமத்து பெண்
அதில், ஒரு பெண் எதிர் தரப்பில் பேசிய பெண்ணை பார்த்து இந்த பாப்பா என்ன காஸ்ட் என்ன எதுன்னு எனக்கு தெரியாது, ஆனால் இப்போ அந்த பாப்பா சரின்னு சொன்னா இந்த நிமிஷம் என் பையனுக்கு கல்யாணம் பண்ணி நான் கூட்டிட்டு போறேன் என்று சொன்னார்.
அதற்கு அந்த பெண், காதல் திருமணம் அனுமதிக்கப்படுகிறது, ஆனால் எம்பிசி, பிசி இவர்களுக்குள் காதல் இருந்தால் ஓகே சொல்கிறார்கள். ஒரு எம்பிசி ஜாதியில் இருப்பர் எஸ்சி காஸ்டில் கல்யாணம் பண்ணும் என்றால் அதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள்.
கோபிநாத்
இதை கேட்ட கோபிநாத், முதலில் பேசிய அம்மாவிடம் இப்போ அந்த பொண்ணு ஓபனா, தான் பட்டியலின பெண் என்று சொல்றாங்க, இப்பவும் ஓகேவா என்று கேட்டுள்ளார். ஓகே என்று முதலில் பேசிய சவுண்ட்டில் சொல்லாததை கவனித்த கோபிநாத், முதலில் பேசிய வேகம் இப்போது இல்லையே சொல்ல, என் வீட்டுக்காரரிடம் கேட்டு சொல்றேன் என்று அந்த அம்மா சொல்லியுள்ளார்.
இதை முதலில் நீங்க வீட்டுக்காரர் கிட்ட கேக்கலையே என்று வாயடைக்க வைத்தார். மேலும் பேசிய அந்த பெண் இந்த பிரச்சனை எனக்கு மட்டுமில்லை, பலருக்கும் இருக்கிறது.
இவங்க இப்படி மாற்றி பேசுறது பிரச்சனை இல்லை, நாங்க எல்லா இடத்திலும் இதே பிரச்சனையே தான் அனுபவிச்சிட்டு இருக்கோம், இது எங்களுக்கு புதுசு கிடையாது, படிக்கிற கலாத்தில் இருந்து இப்ப வரை எங்கேயோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு இடத்தில் என்னை மாதிரி பெண்களுக்கும் பசங்களுக்கும் இதே ஒதுக்குதல் இருக்கிறது என்று பேசி எதிர் தரப்பு அம்மாக்களை மெளனமடைய செய்திருக்கிறார் அந்த பட்டியலின பெண்.