நெல்சன்- ஆ வேண்டவே வேண்டாம்ப்பா? பீஸ்ட் படத்தால் தலைவர்169-க்கு ஆப்பு வைத்த ரஜினிகாந்த்

vijay nelson superstar rajinikanth beast thalaivar169
By Edward Apr 19, 2022 07:57 AM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அண்ணாத்த படத்திற்கு பிறகு தன்னை இயக்க யார் சிறந்த இயக்குனர் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது நடிகர் விஜய் சிபாரிசால் தலைவர் 169 படத்தினை இயக்க பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் கமிட்டாகினார்.

இதன் அதிகாரப்பூர்வ தகவலை சன் பிச்சர்ஸ் நிறுவனம் வீடியோவோடு இணையத்தில் வெளியிட்டனர். தற்போது பீஸ்ட் படத்தினை பார்த்துவிட்டு சென்ற சூப்பர் ஸ்டார், ஐஸ்கிரீம் நல்லா இருந்துச்சு என்று காமெடியாக விமர்சனம் செய்துவிட்டு சென்றாராம்.

இந்நிலையில் நெல்சன் இயக்கம் தனக்கு செட்டாகாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு முடிவுக்கு வந்துவிட்டாராம்.

இந்நிலையில் நெல்சன் இணையதளத்தில் இருக்கும் பயோபிக்கில் தலைவர் 169 என்ற பெயரை எடுத்து விட்டு வெறும் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படத்தை மட்டுமே வைத்துள்ளார்.

இதனை நெட்டிசன்கள் பலர் கலாய்த்து என்ன நெல்சா இப்படி ஆகிடுச்சே என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

ஆனால் ஒருசில நிமிடங்களிலேயே அதனை பழையபடி தலைவர் 169 பெயரை மீண்டும் சேர்த்திருக்கிறார் நெல்சன். என்ன நெல்சா ஒரே மைண்ட்ல இருக்க மாட்டியா என்று பலர் கிண்டல் செய்து வருகிறார்கள்.

GalleryGalleryGallery