என்னடா பாக்குற! நெல்சன் பேட்டியை கண்டபடி கலாய்க்கும் நெட்டிசன்கள்..

vijay nelson sunpictures beast vijayudan nerukkuner
By Edward Apr 07, 2022 06:11 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் ஏப்ரம் 13ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஆடியோ லான்ச் உள்ளிட்ட பல பிரமோஷன் வேலைகளை எதுவும் செய்யாமல் இருந்துள்ளனர்.

அதற்கு இணையாக விஜய்யை வைத்து ஒரு நேர்காணலை ஒளிப்பரப்பு செய்யவுள்ளது சன் தொலைக்காட்சி. விஜய்யுடன் நேருக்கு நேர் என பெயரிடப்பட்ட இந்த பேட்டியை இயக்குனர் நெல்சன் தான் தொகுப்பாளராக இருந்து கேள்விகளை கேட்டுள்ளார்.

அதன் பிரமோ வீடியோக்கள் இணையத்தில் வெளியிட்டு வரும் நிலையில் நெட்டிசன்கள் அதை கண்டபடி கலாய்க்கும் மீம்ஸ் வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். தற்போது வடிவேலு காமெடியை வைத்து ஒரு எடிட்டிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.