சென்னை வீட்டை விற்று அமெரிக்கா செல்ல இதுதான் காரணம்!! நெப்போலியன் ஓப்பன் டாக்..
நெப்போலியன்
நடிகர் நெப்போலியன் தன மூத்த மகன் தனுஷின் திருமணத்தை ஜப்பானில் நடத்தி முடித்தார். தனுஷ் - அக்ஷயா திருமணத்தை பலரும் உடல் ரீதியாக விமர்சித்து வந்ததை அடுத்து தனுஷும் நெப்போலியனும் பதிலடி கொடுத்திருந்தார்.
இந்நிலையில் சென்னை வீட்டை விற்றுவிட்டு அமெரிக்கா செல்ல முழுக்காரனமே என் மகன் தான் என்று கூறியிருக்கிறார்.
அமெரிக்கா செல்ல காரணம்
சென்னையில் வீல் சேர் ஆக்சஸ் கொண்ட பள்ளிகள் இல்லை, எங்கே சென்றாலும் தனுஷை தூக்கிக்கொண்டே செல்ல வேண்டிய நிலை இருந்தது. அதையெல்லாம் பார்த்த தனுஷ் அப்பா இந்த ஆக்சஸ் எல்லாம் அமெரிக்காவில் இருக்கிறது. இங்கே எல்லோரும் என்னை ஒருமாதிரி பார்க்கிறார்கள்.
நாம் அங்கே சென்றுவிட்டால் உங்களுக்கு சிரமம் இருக்காது. பள்ளிகளிலும் என்னை யாரும் கிண்டல் செய்யமாட்டர்கள் என்று தனுஷ் கூறினான். அப்போது தான் சென்னை விட்டு அமெரிக்காவுக்கு செல்ல முடிவு எடுத்தேன் என்று நெப்போலியன் எமோஷனலாக பேசியிருக்கிறார்.